welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Monday, 9 July 2012

காலம் அறிந்து செயல்படுங்கள்!!



வெற்றிக்கு மூன்று விஷயங்கள் தேவை. அவை திறமை, உழைப்பு, காலம். இந்த மூன்றில் முதலிரண்டு தேவைகள் புரிந்த அளவுக்கு மூன்றாவது தேவையான காலம் புரியாமல் இருப்பதே பல திறமையாளர்களும், உழைப்பாளர்களும் தோல்வியடையக் காரணம். என்னிடம் இத்தனை திறமை இருந்தும் பயன்படவில்லையே, என்னுடைய இத்தனை உழைப்பும் வீணானதே என்று புலம்பும் பலரும் தக்க காலத்தில் தகுந்த விதத்தில் அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.

மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!





பெரும்பாலான மனிதர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் நம்புவதும், எதிர்பார்ப்பதும் பெரும்பாலும் யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருப்பதில்லை. நிஜமாக முடியாத ஒரு நேர்கோடான, சீரான  வாழ்க்கைக்காக ஆசைப்படுகிறார்கள். அப்படி ஒரு வாழ்க்கை யாருக்குமே என்றுமே இது வரை அமைந்ததில்லை. இனி அமையப் போவதுமில்லை. அதனால் அவர்கள் எதிர்பார்ப்புகளும், நடைமுறை நிஜங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருக்க, அவர்கள் வாழ்க்கை முழுவதையும் பிரச்சினைகளாகவே காண்கிறார்கள். அதன் காரணமாக தினசரி வாழ்வில் சீக்கிரமாகவே அமைதியை இழந்து தவிக்கிறார்கள்.

உலகம் தன்னிஷ்டப்படியே இயங்குகிறது. நிகழ்வுகள் பலதும் நம் கருத்துக்களை அனுசரித்துப் போவதில்லை. நம்மால் முழுவதும் உணர முடியாத ஏதோ ஒரு விதியின்படியே பலதும் நடக்கின்றன. அதை ஏற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா என்று உலகம் உங்களிடம் கேள்வி கேட்டு எதையும் நடத்துவதில்லை. பல சமயங்களில் உங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை தரப்படுவதில்லை. அப்படி இருக்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத,
நம்மால் மாற்றியமைக்க முடியாதவற்றை எண்ணி வருந்துவதும், புலம்புவதும், கலங்குவதும் அந்த நிலைமையை எள்ளளவும் மாற்றி விடப் போவதில்லை.

கண்ணதாசனின் வைரவரிகள்!




கண்ணதாசன் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது
அவரது கவிதைகள் தான். ஈடியணையற்ற ஆயிரக்கணக்கான பாடல்களைத் தந்தவர் அவர். ஆனால் அவரது கவிதைகளைப் போல அவரது மற்ற எழுத்துக்களும் மிகச் சிறப்பு வாய்ந்தவையே. அவரது உரைநடைகளில் இருந்து எடுக்கப்பட்ட சில வைரவரிகளை இங்கே தொகுத்து தந்துள்ளேன். அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை நறுக்குத் தெறித்தாற் போல அவர் சொல்லும் கருத்துக்களை நீங்களும் ரசியுங்களேன்!





வெற்றிக்கு முன் வரும் தடைகள்!!




ஆன்மாவிற்கான சிக்கன் சூப் கதைகள் (Chicken Soup for the Soul ) பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை, அன்பு, அறிவு, வாழ்வியல் ஆகியவற்றை விளக்கும் உண்மைக்கதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு அவை. அந்தத் தலைப்பில் 200 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. பதினோரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. நாற்பதற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.  இந்த அளவு வெற்றியடைந்த அந்த நூல்களில் முதல் நூலைப் பதிப்பிக்க அதன் தொகுப்பாளர்கள் ஜேக் கேன்ஃபீல்டு (Jack Canfield) மற்றும் மார்க் விக்டர் ஹான்சென் (Mark Victor Hansen) இருவரும் சந்தித்த தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

Wednesday, 4 July 2012

Enjoy life - வாழ்க்கையை அனுபவிக்க...



இக்காலத்தில் ஒரு தீர்வுகாண முடியாத நோய்களில் ஒன்று அவசரம். ஆம் நண்பர்களே இந்த இயந்திர உலகத்தில் மனிதன் படும்பாட்டைத்தான் சொல்கிறேன். வேலைசெய்யும் இடம், குடியிருக்கும் இடம், போக்குவரத்து வாகனங்கள்(Transport vehicles like bus), கல்வி கற்கும் பள்ளிகள்(Schools), அமைதியைத் தேடி செல்லும் ஆன்மீக தளங்கள்(Temple), வங்கி(Bank), சினிமா திரையரங்குகள்(Cinema Theater) என எங்கு பார்த்தாலும் பொங்கி வழிகிறது அவசரம்.

வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வறுமை ஒரு தடையல்ல...!!


 "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி" என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள், இன்றைய இளைஞர்களிடம்தான் நாளைய இந்தியாவின் எதிர் காலமே உள்ளது என்பதை அழுத்தமாகப் பாடியுள்ளார்.


தாயும் சேயும்
ஒவ்வொரு தாய், தந்தையும் தங்களுடைய குழந்தைகளிடம், தங்கள் உயிரினும் மேலாக பாசம் செலுத்துகின்றனர்.  அவனை வளர்ப்பதில், தங்கள் நேரம், பணம், உழைப்பு, பாசம் அனைத்தையும் கொட்டி வளர்க்கிறார்கள்.

வீழ்ச்சிகளை வாய்ப்புகளாக மாற்றிய சிறுவன்


வாய்ப்புகள் பெரும்பாலும் தடைகள், தோல்விகள் என்ற உடைகளையே அணிந்து வருகின்றன. நேற்றைய தோல்விகளின் முன் இன்றைய வெற்றி வாய்ப்புகள் மறைக்கப் படுகின்றன. இன்று சரித்திரம் படைத்த வெற்றியாளர் அனைவரும், வீழ்ச்சிகளை வாய்ப்புகளாக மாற்றியவர்கள் தான். சோர்ந்து போவதற்கான காரணங்கள் பல இருந்தும்.... தன் வீழ்ச்சிகளை வாய்ப்புகளாக மாற்றிய இச்சிறுவனின் நம்பிக்கைதான்,

தன்னம்பிக்கை...



தோல்வியால் துவண்டு போயிருக்கும் இளைஞர்களுக்காக இப்பதிவு அர்ப்பணிக்கப்படுகிறது.
வணக்கம் நண்பர்களே..!

இன்றைய காலகட்டத்தில்

தன்னம்பிக்கை குறைவால் இன்றும் பல இளைஞர்கள் வெற்றிப் பயணத்தை தொடங்காமலே இருக்கின்றனர். தன்னம்பிக்கை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றிப்பெறுவது எப்படி எனப்பார்ப்போம்.

தோல்விக்கு 'குட்பை' சொல்லுங்கள்...


எடுத்த முயற்சிகளிலெல்லாம் தோல்வி.. எங்குப் பார்த்தாலும் துரதிருஷ்டத்தின் ஆதிக்கம்.. ஒரு அடி எடுத்து வைத்தால் பத்தடி பின்நோக்கித் தள்ளிவிடுகிறது உலகு. எனக்கும் மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது..நான் மட்டுமே இந்த உலகில் அதிர்ஷ்டம் இல்லாதவன். இப்படி மனிதன் வாழ்க்கையில் விரக்தியடைந்து, இனி எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் வாழ்ந்தென்ன லாபம்? என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாலே அவன் அடுத்து எடுக்கப் போகும் முடிவு தற்கொலையாகத்தான் இருக்கும். 

போட்டோசாப் SHORTCUT KEYS....

Wednesday, 13 June 2012

சமச்சீர் கல்வியும்.... நாலாம் தலைமுறையும்...


மயிலாடுதுறையிலிருந்து சிறிது வட மேற்காக ஆறு கிலோ மீட்டர் சென்றால் நீடூர் என்ற கிராமம் வரும். இஸ்லாமிய மக்களும், இந்துக்களும் கிட்டத்தட்ட சம அளவில் வசிக்கின்ற அழகிய கிராமம். அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கமலி என்ற பெண் நேற்று வெளியான 10 ஆம் வகுப்பு தேர்வில் 500 க்கு 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாகவந்திருக்கின்றாள்.

Wednesday, 6 June 2012

videoக்களை எடிட் செய்வதற்கு ஒரு சிறந்த சாப்ட்வேர் .


வீடியோக்களை எடிட் செய்வதற்கு நிறைய மென்பொருள்கள் உள்ளன. இருப்பினும் Video Magic Pro என்ற மென்பொருள் பல்வேறு வசதிகளை
உள்ளடக்கியுள்ளது.

கம்ப்யூட்டர் Assembling செய்வது எப்படி தமிழில் .உங்களுக்காக .


உங்கள் கம்ப்யூட்டர் பிரச்சனையா? நீங்கள்உங்கள் HardwareEngineer-ரை தொடர்பு கொள்ளவதற்கு முன் நீங்களே அதை சரி செய்ய முடியும்.
இந்த Video-ல் கம்ப்யூட்டர் Assembling செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுகிறார்கள் அதுவும் தமிழில் .
கம்ப்யூட்டர்யை Assembling செய்வது எப்படி? மற்றும் கணிப்பொறியில் உள்ள Parts- பற்றி அடிப்படையில் இருந்து இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இதை டவுன்லோட் செய்து நீங்களும் கம்ப்யூட்டர் Assembling செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க் :

நன்றி............(ORATHANADUKARTHIK)

நமது புகைபடத்தில் Visual effects + Slide Show உருவாக்குவதற்கு..



நமது புகைப்படங்களில் வித விதமான Video Effects கொண்டுவர பலவிதமான மென்பொருட்கள் உள்ளன.ஆனால் சிறிய அளவில்

உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும் இணையதளம்



இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால்
ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. 
மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள். உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும். இதையெல்லாம் எப்படி கண்டறிவது?
இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம். இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.
இதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான். இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம்.
எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.
WEB LINK :   http://www.tineye.com/ 
நன்றி...(ORATHANADUKARTHIK)

இரவுப்புகைப்படக்கலை - ஒரு அறிமுகம்


இன்னைக்கு இணையத்துல ஒரு அற்புதமான நிகழ்படம் கிடைத்தது!!


இரவில் புகைப்படங்கள் எடுக்க (Night photography) உங்கள் SLR கேமராவை எப்படி பயன்படுத்தலாம் என்பது தான் அது.எப்படி குழந்தைக்கு சொல்லித்தருவது போல் சொல்லியிருகிறார் பாருங்கள்!!சொன்னது SLR கேமராவிற்கு என்று குறிப்பிட்டாலும் அவர் சொல்லும் குறிப்புகள் aperture மற்றும் ஷட்டர் வேகம் மாற்றக்கூடிய எல்லா கேமராக்களுக்கும் பொருந்தும்.
:-)

DOF என்றால் என்ன??


Focal Length : தமிழ்ல இதை குவிய தூரம் அப்படின்னு சொல்லலாம்.

சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல இது பத்தி படிச்சிருப்பீங்களே ,ஞாபகம் இருக்கா???

சுருக்கமா சொல்லனும்னா குவிய தூரம் என்பது லென்ஸிற்கும் கேமராவின் சென்சர்/படச்சுருளின் இடையில் இருக்கும் தூரம். இதைத்தான் லென்ஸ் பற்றி குறிப்பிடும்போது குறிப்பிடுவார்கள். உதாரணமாக 180mm lens என்று சொன்னார்கள் என்றால் கேமராவில் பொருத்திவிட்ட பின் லென்ஸிற்கும் ,ஒளிக்கற்றை வந்து விழும் திரைக்கும் இடையில் உள்ள இடைவெளி 180mm இருக்கும் என்று பொருள். பல லென்ஸ்கள் ஒரே குவிய தூரத்தில் மட்டுமே நாம் உபயோகப்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சில லென்ஸ்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கள் எந்த குவிய தூரத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு 18-55mm என்று ஒரு லென்ஸ் உள்ளது. நீங்கள்் SLR வாங்கினீர்கள் என்றால் இந்த லென்ஸையும் சேர்த்தே பல இடங்களில் விற்பார்கள்.

இந்த லென்ஸின் குவிய தூரத்தை 18mm-இல் இருந்து 55mm வரை எந்த தூரத்திலும் மாற்றிக்கொள்ளலாம். இது போன்ற லென்ஸ்களை zoom lens என்று அழைப்பார்கள்.

படம் செய்ய விரும்பு - பாகம் 1 - F-STOP என்றால் என்ன??


வணக்கம் மக்களே!!

நல்ல படங்கள் எடுக்கனும்னு நம்ம எல்லோருக்குமே நிறைய ஆசைதாங்க,ஆனா அது பத்தி கொஞ்சம் கத்துக்கலாம்னு பாத்தா நம்ம பசங்க டெக்னிகலா என்னென்னமோ பேசி நம்மல மூட் அவுட் பண்ணீருவாய்ங்க!! எத்தனை இணையதளம் பாத்திருக்கோம்??எத்தனை புகைப்பட 
ஆர்வலர்களை சந்திச்சிருப்போம்???

MANUAL-இல் படம் எடுப்பது எப்படி??-2


ஒரு கேமராவில் உள்வரும் ஒளியின் அளவு(திறப்பளவு-exposure) போதுமானதா என்பதை நாம் எப்படி அறிந்துக்கொள்வது???


ஒளி அதிகமாகிவிட்டால் ,படம் ஓவர் எக்ஸ்போஸ்ட்(overexposed) ஆகி வெளிரிப்போய்விடும்,அதே ஒளி கம்மியாக இருந்தால் படம் அண்டர் எக்ஸ்போஸ்ட்(underexposed) ஆகி படம் இருண்டுபோய்விடும்!


உங்கள் வ்யூ ஃபைண்டர்(viewfinder) அல்லது LCD திரையின் கீழே ஒரு விதமான அளவுகோள் ஒன்று இருக்கிறதே கவனித்தீர்களா???
பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்து ஒரு பங்குக்கு மூன்று புள்ளிகள் எனும் அளவுகளில்,பூஜ்ஜியத்திற்கு அதிகமாகவும்,குறைவாகவும் (positive and negative)இரண்டு அல்லது மூன்று புள்ளிகளுக்கு இருக்கும்.

MANUAL-இல் படம் எடுப்பது எப்படி?? - 1


உங்களின் கேமராவில் வெவ்வேறு மோட்கள் பற்றி அறிந்துக்கொண்டோம் அல்லவா! இந்தப்பதிவில் அந்த மோட்களில் படம் பிடிக்க ஆரம்பிக்கலாம் வரீங்களா??

போன பதிவை படிக்காதவங்க,அதை ஒரு சுத்து படிச்சிட்டு வந்துடறது நல்லது.
Manual என்று நான் இங்கு குறிப்பிடுவது, லென்ஸ் விட்டம் அல்லது ஷட்டர் வேகம் அல்லது இரண்டையுமே நாமே தீர்மானித்து படம் எடுக்கும் முறையை சொல்கிறேன்.
முதலில் ஆட்டோ மோடை விட்டு விட்டு Av,Tv,M ஆகிய மோட்களில் படம் பிடிப்பதால் என்ன பயன் என்று தெரிந்துக்கொள்வோம்.

Friday, 1 June 2012

Huawei Dongle ஐ Unlock செய்வது எப்படி?




Dongle ஐ Unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்.Dongle ஐ Unlock 
செய்வதற்கு கடைக்கு சென்றால்,எப்படியும் உங்களிடம் 250 ரூபாய் 
சேவை கட்டணமாக அரவிடுவார்கள்.அதை நான் இங்கு இலவசமாக
 சொல்லித்தருகிறேன்.

அனைத்து வகையான Dongleகளையும் Unlocking செய்ய - DC Unlocker

நாம் ஏற்கனவே பார்த்த முறைகளைவிட,  இந்த DC Unlocker மென்பொருளை

சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது"




இன்று நம் நாட்டில் விலைவாசி உயர்வு என்பது பஸ் டிக்கெட்டில் துவங்கி பெட்ரோல்,டீசல் என்று உயர்ந்து கடைசியில் உணவுப்பொருட்கள் வரை பரவியிருக்கிறது இந்த விலைவாசி உயர்வு என்கிற‌ விஷம். ஆனால் சீனாவில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது.

Thursday, 10 May 2012

நேரடியாக அடுத்தவர் வலைப்பூவில் Gadget Add செய்யலாம்



வலைப்பூக்களில் ஒரு அமைப்பு, குழு, அல்லது சமூக சேவை தளங்கள் தங்கள் வலைப்பூவுக்கு என்று ஒரு Logo செய்து அதனை அடுத்தவர் வலைப்பூக்களில் Add செய்ய வழி செய்து இருப்பார்கள். ஆனால் அதனை பயன்படுத்துபவர்கள் அந்த Coding ஐ copy செய்து மீண்டும் தங்கள் Blogger Account க்கு சென்று அதை Paste செய்ய வேண்டி இருக்கும். இதை நேரடியாக ஒரே Click மூலம் அவர்கள் Layout க்கு சென்று Copy, Paste போன்ற எதுவும் செய்யாமல் Add செய்யும்படி செய்தால் எளிது தானே. அதன் வழிகளைதான் நான் சொல்லப் போகிறேன்.

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய Basic Keyboard Shortcuts

மிகச் சிறந்த Video Converter இலவசமாக..


சில மென்பொருட்கள் பணம் கொடுத்து வாங்கும் படி நிலைமை இருக்கும், ஆனால் நாம் எதிர்பார்க்கும் வசதிகள் எல்லாம் அதில் இருக்காது. ஆனால் இலவசமாக கிடைக்கும் சிலவற்றில் போதும் போதும் என்கிற அளவுக்கு வசதிகள் கிடைக்கும். அப்படி பட்ட ஒன்றும் தான் Free Make Video Converter. Converter என்ற ஒன்றைத் தவிர நிறைய பலன்களை கொண்டிருப்பது இதன் சிறப்பு. 


இதன் சிறப்பம்சங்களை காண்போம்.

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி?



நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.



முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம்.
உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில் 

Tuesday, 8 May 2012

மின்னஞ்சலைப் பாதுகாக்க..

நன்றி....

Sunday, 29 April 2012

ஷட்டர் க்ராஷ் (SHUTTER CRASH)


ஷட்டர் க்ராஷ் (Shutter Crash) காமிராவுக்கு ஹார்ட் அட்டாக் மாதிரி.


ஷட்டர்:
உங்களுக்குத் தெரிஞ்சாலும், ஷட்டருக்கு ஒரு சின்ன அறிமுகம். ஷட்டர் (shutter) லென்ஸ் மூலமா உள்ள வாரும் ஒளிய நிறுத்தும் அல்லது அப்பாச்சர் (Aperture) அளவுக்கு ஏற்ப ஒளிய காமிராவோட சென்சருக்கு அனுப்பும். கிளிக் அதுதான் காமிராவோட இதயத் துடிப்பு!

போஸ் கொடுக்கலாம் வாங்க..


போஸ் கொடுக்க வாங்க கேமராவை கையில் எடுத்த உடனே எதிரில் இருப்பவரில் பலர் attention போஸில்தான் நிப்பாங்க. நம்க்கும் அவங்களை எந்த மாதிரி நிறகவைக்க வேண்டும் என்ற தவிப்பும் இருக்கும். இந்த இடுகைகளில் சில அழகிய எளிதான் போஸ்கள் இருக்கு. பார்த்து பழ்க்குங்க. 

Monday, 9 April 2012

ஷட்டர் க்ராஷ் (Shutter Crash)

ஷட்டர் க்ராஷ் (Shutter Crash) காமிராவுக்கு ஹார்ட் அட்டாக் மாதிரி.

ஷட்டர்:
உங்களுக்குத் தெரிஞ்சாலும், ஷட்டருக்கு ஒரு சின்ன அறிமுகம். ஷட்டர் (shutter) லென்ஸ் மூலமா உள்ள வாரும் ஒளிய நிறுத்தும் அல்லது அப்பாச்சர் (Aperture) அளவுக்கு ஏற்ப ஒளிய காமிராவோட சென்சருக்கு அனுப்பும். கிளிக் அதுதான் காமிராவோட இதயத் துடிப்பு!

புகைப்படங்களில் நேர்த்தி - பாகம் - 5 .. பல்வேறு SCENE MODES


வணக்கம் நண்பர்களே..


Programme mode ல் படம் நன்றாக வரும் என்றால் , எதற்கு manual mode , aperture mode மற்றும் பல்வேறு modeகள் எல்லாம்?
கேமராவில்,

manual mode,
aperture priority mode ,
shutter speed mode ,
programme mode


தவிர கிட்டதட்ட அனைத்துமே pre - programmed தான்..

Exposure ஐ பொறுத்தவரையில் இரண்டு விசயங்கள் சேர்ந்து தீர்மானிக்கின்றன..அவை apetureமற்றும் shutter speed.. இவ்விரண்டையும் மாற்றி மாற்றி வெளிச்சத்திற்கேற்ப அமைப்பது தான் நமது வேலையே...

புகைப்படங்களில் நேர்த்தி - பாகம்:4.. programme mode மற்றும் exposure compensation

வணக்கம் நண்பர்களே..

பொதுவாக மக்கள், கேமராக்களில் உள்ள settings களை பயன்படுத்தத்தெரியாமல் பயந்து போய் அநேகம் பேர் auto mode பயன்படுத்துகின்றனர்.. ஆனால் இது எல்லா இடங்களுக்கும் பொருந்தாது..

safety யாக படம் மட்டும் வந்தால் போதும் என்று படமெடுப்பவர்களுக்கு வேண்டுமானால் auto mode போதும்..ஆனால் கொஞ்சம் மாற்றி வித்தியாசமாக ஒளிகளில் எடுக்க ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக மாறித்தான் ஆக வேண்டும்..

அவர்களுக்கு மாற்றாக ஒரு எளிய வழி `programme mode`..

புகைப்படங்களில் நேர்த்தி - பாகம் : 3 .. EXPOSURE

வணக்கம் நண்பர்களே,

படம் எடுப்பதற்கு முன் நாம் கேமராவில் செய்ய வேண்டிய முதல் மற்றும் முக்கிய செட்டிங்ஸ் சரியான exposure அமைப்பது தான்..

இந்த ஒன்றை மட்டும் (கேமராவில்) நாம் முக்கியமாக கவனித்தாலே ஒரு நல்ல படத்திற்கு கிட்டதட்ட போதுமானது.. இன்னும் சில settingsகளுக்கும் பங்கு உண்டு..இதில் exposure முக்கியமானது என்பதால் முதலில் அதை பற்றி பார்ப்போம்..

ஏனென்றால் exposure settings தான் அனைவருக்கும் பொதுவானது..

இதை எல்லோரும் ஒரே மாதிரி சரியாக தான் அமைக்க வேண்டும்.

மற்ற settings எல்லாம் அவரவர் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம்.. அது அவரவர் கிரியேட்டிவிட்டியில் தான் உள்ளது...

Thursday, 1 March 2012

CCleaner - மென்பொருள் புதிய பதிப்பு 3.16.1666



சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய

புகைப்படங்களில் நேர்த்தி .. படம் எடுப்பதற்கு முன் - கேமராக்களை எப்படி பிடிப்பது ?

படம் எடுப்பதற்கு முன் கேமராவில் நாம் செய்ய வேண்டிய விசயங்களுக்கு முன் நாம் முதலில் சரியாக செய்யவேண்டியது கேமராவை எப்படி பிடிக்க வேண்டும் என்பது தான்..



ஒரு படம் நல்ல ஷார்ப்பாக வரவேண்டுமென்றால் கண்டிப்பாக கேமரா ஆடாமல் இருப்பது அவசியம்..

`புகைப்படங்களில் நேர்த்தி..

வணக்கம் நண்பர்களே....

நீண்ட இடைவெளிக்கு பிறகு `புகைப்படங்களில் நேர்த்தி` என்கிற புதிய தலைப்பின் வழியாக உங்களை சந்திப்பதில், பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்...

இன்றைக்கு கிட்டதட்ட அனைவரிடத்திலும் ஏதோ ஒரு வடிவில் கேமரா என்பது நம்மிடம் இருப்பது உறுதி..

ஒரு சிலர் , முதன் முதலில் வாங்குகின்றோம் , நல்லதாக வாங்கிவிடலாம் என்று தனக்கு சம்பந்தமில்லாத , தேவையில்லாத விலை அதிகமான கேமராக்களை ஆர்வத்தில் வாங்கிவிடுவார்கள்..ஆனால் அவர்களுக்கு நன்றாக படம் எடுக்க தெரியாது...

சரி நமக்கு அவ்வளவு தான் தெரியும் என்று படம் எடுக்க விருப்பப்படமாட்டார்கள்.. அவ்வளவு தான், கேமரா சும்மா வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும்..

Thursday, 23 February 2012

மென்பொருட்களின் சீரியல் எண்களை அறிந்து கொள்வதற்கு..

உங்கள் கணணியில் பல்வேறான மென்பொருட்களை நிறுவி பயன்படுத்துவீர்கள். அதில் இலவச மற்றும் கட்டண மென்பொருட்களும் அடங்கும்.


கட்டணம் செலுத்தி வாங்கும் மென்பொருட்களுக்கு(Licensed softwares) வைத்திருப்பீர்கள். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும் அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்கள் அனுப்பப்படும்.

Tuesday, 14 February 2012

Feedburner Email Subscription இல் உங்கள் Logo வரவழைப்பது எப்படி?


இமெயில் subscription என்பது பதிவர்கள் பெரும்பாலானோர் தமது வலைப்பூவுக்கு வைத்து இருப்பீர்கள். நமது வாசகர்கள் இதை subscribe செய்வதன் மூலம் நம் பதிவின் முன்னோட்டத்தை அவர்கள் இமெயிலில்  ஆட்டோமேடிக் ஆக படிப்பார்கள். அதில் நாம் நம் பிளாக் லோகோவை சேர்க்கும் வசதியினை நமக்கு Feedburner வழங்கி உள்ளது. அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம். 

Sunday, 12 February 2012

20GB வீடியோ பைல்களை Youtube ல் அப்லோட் செய்ய..


வணக்கம்நண்பர்களே!!   கூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும். இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. சாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் அப்லோட் செய்யும் வசதி உள்ளது. இதனால் பெரிய வீடியோ பைல்களை அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆனால் யூடியுப் தளத்தில் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களையும் அப்லோட் செய்யும் வசதி மறைந்து உள்ளது. அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது என கீழே பார்ப்போம்.

Friday, 10 February 2012

இணையத்தில் சுலபமாக தமிழில் எழுத.......

    . 








வணக்கம் நண்பர்களே!!.
 
                                         


                                       இந்தப்பதிவு இணையத்தில் நிறைய நண்பர்களுக்கு தமிழில் எழுதுவது எப்படி என நிறைய நண்பர்கள் கேட்டதால் இதனை உங்களிடம் பகிர்கிறேன்...

Thursday, 9 February 2012

சிக்கிய சிடியை வெளியே எடுப்பது எப்படி?



நீங்கள் அடிக்கடி சிடி பயன் படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள். ஆம், உங்கள் சிடி கம்ப்யூட்டரின் சிடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.

எத்தனை முறை சிடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சிடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க




ஜிமெயில் தளத்தில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட மெயில் அக்கவுண்ட்களை வைத்திருப்பார்கள். ஆனால், ஒரு வேளையில், ஒரு அக்கவுண்ட்டை மட்டுமே திறந்து பயன்படுத்த முடியும். ஒன்றைத் திறந்து மெயில்களைப் படித்து முடித்த பின்னர், அந்த அக்கவுண்ட்டினை மூடிய பின்னரே அடுத்ததைத் திறந்து பயன்படுத்த முடியும்.


ஆனால், அண்மையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களைத் திறந்து பயன்படுத்தும் வசதியை, கூகுள் வழங்கியுள்ளது. இதனை multiple signin என அழைக்கிறது இதனைச் செயல்படுத்த கீழ்க்கண்டபடி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.

எக்ஸெல் - ஷார்ட்கட் கீகள்..






வணக்கம்நண்பர்களே!! 
              எக்ஸெல் - ஷார்ட்கட் கீ..பற்றிப்பார்போம்.....
CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF