welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Wednesday, 6 June 2012

இரவுப்புகைப்படக்கலை - ஒரு அறிமுகம்


இன்னைக்கு இணையத்துல ஒரு அற்புதமான நிகழ்படம் கிடைத்தது!!


இரவில் புகைப்படங்கள் எடுக்க (Night photography) உங்கள் SLR கேமராவை எப்படி பயன்படுத்தலாம் என்பது தான் அது.எப்படி குழந்தைக்கு சொல்லித்தருவது போல் சொல்லியிருகிறார் பாருங்கள்!!சொன்னது SLR கேமராவிற்கு என்று குறிப்பிட்டாலும் அவர் சொல்லும் குறிப்புகள் aperture மற்றும் ஷட்டர் வேகம் மாற்றக்கூடிய எல்லா கேமராக்களுக்கும் பொருந்தும்.
:-)



அவரு இங்கிலீபீசுல என்னவோ சொல்லுறாரு,எனக்கு ஒன்னும் புரியலபா என்கிறீர்களா???
அவர் சொல்வதின் சாராம்சம் இதுதான்.

1.)இரவுப்புகைப்படக்கலையில் முக்கியமான இரண்டு விஷயங்கள்
அ.) உங்கள் கேமராவில் முடிந்த அளவுக்கு ஒளி உட்புகுமாறு பார்த்துக்கொள்வது.இதற்கு aperture மற்றும் ஷட்டரின் வேகத்தை தேவையான அளவுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஆ.)அப்படி செய்யும் போது உங்கள் கேமரா அதிராமல்/அசையாமல் பார்த்துக்கொள்வது

2.)உங்கள் கேமராவை manual mode-இற்கு மாற்றிக்கொள்ளுங்கள் .

3)உங்கள் லென்ஸின் aperture-ஐ முடிந்த வரை பெரியதாக ஆக்கிக்கொள்ளுங்கள். f number எவ்வளவுக்கெவ்வளவு சிறியதாக இருக்கிறதோ உங்கள் லென்ஸ் துளையின் விட்டம் அவ்வளக்கவ்வளவு பெரியதாக இருக்கிறது என்று பொருள்.இதை பற்றி மெலும் அறிய இந்த பதிவுக்கு செல்லுங்கள்.

4.)இப்பொழுது உங்கள் கேமராவின் ஷட்டர் வேகத்தை மாற்றி மாற்றி போட்டு நல்ல படம் எடுக்க முயலுங்கள்! அதிக மாக வேகம் இருந்தால் ஒளி உட்புகுவதற்கான நேரம் குறைந்து படம் இருட்டாகிவிடும்,வேகம் குறைவாக இருந்தால் உள்ளே உட்புகும் ஒளியின் ஆளவு அதிகமாகி படம் வெளிரிப்போய் விடும்.
உங்கள் SLR கேமராவில் aperture மாற்றுவது எப்படி,ஷட்டரின் வேகத்தை மாற்றுவது எப்படி என்பதை எல்லாம் உங்கள் கேமராவின் manual-ஐ பார்த்தால் தெரிந்து விடும்.

5.)இரவில் புகைப்படம் எடுக்க பொதுவாக குறைந்த அளவு ஷட்டர் வேகம் தேவைப்படும் என்பதால் படம் எடுத்து முடிக்கும் வரை கேமரா அசையாமல் இருக்க முக்காலியை (tripod)பயன்படுத்துங்கள்.
முக்காலி இல்லையென்றால் ஏதாவது நிலையான தரையில் கேமராவை பொருத்தி படம் எடுப்பது உசிதம்.
கேமராவை க்ளிக் செய்யும் பொது கூட சில அதிர்வுகள் ஏற்படும் என்பதால் கேமராவில் timer-ஐ செட் செய்து படம் எடுப்பது மிக உபயோகமான உத்தி!

6.)அப்புறம் என்ன?? ஷட்டர் வேகத்தை மாற்றி மாற்றி படங்களை சுட்டு தள்ளுங்க!! ஒளியின் அளவை மாற்றி மாற்றி போட்டு,படத்திற்கு கனக்கச்சிதமான அளவு ஒளி அமைந்த படத்தை எடுத்து மகிழுங்கள்!! சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல புகைப்படமும் விரல்ப்பழக்கம் தான்!!

இனிமே இரவில் அழகழகான படங்கள் எடுக்க வாழ்த்துக்கள்!!
போகறதுக்கு முன்னாடி உங்களுக்காக ஒரு உதாரணம்,exif தகவல்களுடன்.


Camera: Canon EOS Digital Rebel XTi
Exposure: 8 sec (8)
Aperture: f/4
Focal Length: 30 mm
ISO Speed: 100

நன்றி.................பிட்போட்டோகிராபி..

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF