welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Saturday 24 December 2011

NDTV HINDU TV PROGRAM ABOUT SUTHANTHIRA MENPORUL.COM


பிளாக்கரில் ஓடும் எழுத்துக்களை(running letters) உருவாக்க



வணக்கம் நண்பர்களே.. இன்று நாம் பார்க்கபோவது வலைதளங்களில் ஓடும் எழுத்துகளை உருவாக்குபது பற்றி. நம்முடைய பிளாக்கர் மற்றும் வலைதளங்களில் ஓடும் எழுத்துக்களை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம். . நமது வலைப்பூ தங்கம்பழனியில் உள்ளது போல.. இதை உருவாக்குவது மிகவும் எளிதுதான்..

HTML -ல் இதுவும் ஒரு அங்கம்தான்.. இதன் பெயர் மார்க்யூ டேக் (Marquee tag) என அழைப்பார்கள்.

இந்த விளைவை ஏற்படுத்த அடிப்படையானது இந்த நிரல் வரிதான். <marquee></marquee> ஓடும் எழுத்துக்களை உருவாக்க இந்த நிரல் பயன்படுகிறது. ஒரு சில ஓடும் வார்த்தைகளை உருவாக்கப்பயன்படும் HTML நிரல் வரிகளைப் கீழே பார்க்கலாம்.


ஓடும் வார்த்தைகளுக்கான அடிப்படை நிரல் வரிகள்!!
<marqueee> நீ ஓடு.. நீ ஓடு.. ஓடிக்கொண்டே இரு..</marquee>

இதனுடைய வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.
நீ ஓடு.. நீ ஓடு.. ஓடிக்கொண்டே இரு..
வலது நோக்கி எழுத்துகளை ஓட விட
<marquee direction="right"> நீ வலது நோக்கி ஓடிக்கொண்டிரு..!</marquee>

மேற்கண்ட நிரல்வரியின் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.
நீ வலது நோக்கி ஓடிக்கொண்டிரு..! 
இரண்டு பக்கமும் சென்று வர

<marquee behavior="alternate">இரண்டு பக்கமும் சென்று வர</marquee>

இதன் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.
இரண்டு பக்கமும் சென்று வர

கீழ்நோக்கி ஓடவிட..

 <marquee direction="down"></marquee>
மேற்கண்ட நிரலின் வெளிபாடு இவ்வாறு இருக்கும்.

கீழ் நோக்கி ஓடும் வரிகள்..
மேல் நோக்கி ஓட விட

 <marquee direction="up">மேல்நோக்கிச் செல்ல...மேல்நோக்கிச் செல்ல...மேல்நோக்கிச் செல்ல...</marquee>
மேற்கண்ட நிரல்வரிகளின் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும். 

மேல்நோக்கி செல்லும் வரிகள்


குறிப்பு; 

இவற்றை உங்கள் பதிவுப்பெட்டியில் Edit HTML - என்பதை தேர்வு செய்த பிறகு இந்த நிரல் வரியைப் பயன்படுத்துங்கள்..

அல்லது வழக்கம்போல Page Element==>Add gadget==>Html/javascript என்பதை தேர்ந்தெடுத்தும் நிரல் வரிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF