welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Wednesday 6 June 2012

DOF என்றால் என்ன??


Focal Length : தமிழ்ல இதை குவிய தூரம் அப்படின்னு சொல்லலாம்.

சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல இது பத்தி படிச்சிருப்பீங்களே ,ஞாபகம் இருக்கா???

சுருக்கமா சொல்லனும்னா குவிய தூரம் என்பது லென்ஸிற்கும் கேமராவின் சென்சர்/படச்சுருளின் இடையில் இருக்கும் தூரம். இதைத்தான் லென்ஸ் பற்றி குறிப்பிடும்போது குறிப்பிடுவார்கள். உதாரணமாக 180mm lens என்று சொன்னார்கள் என்றால் கேமராவில் பொருத்திவிட்ட பின் லென்ஸிற்கும் ,ஒளிக்கற்றை வந்து விழும் திரைக்கும் இடையில் உள்ள இடைவெளி 180mm இருக்கும் என்று பொருள். பல லென்ஸ்கள் ஒரே குவிய தூரத்தில் மட்டுமே நாம் உபயோகப்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சில லென்ஸ்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கள் எந்த குவிய தூரத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு 18-55mm என்று ஒரு லென்ஸ் உள்ளது. நீங்கள்் SLR வாங்கினீர்கள் என்றால் இந்த லென்ஸையும் சேர்த்தே பல இடங்களில் விற்பார்கள்.

இந்த லென்ஸின் குவிய தூரத்தை 18mm-இல் இருந்து 55mm வரை எந்த தூரத்திலும் மாற்றிக்கொள்ளலாம். இது போன்ற லென்ஸ்களை zoom lens என்று அழைப்பார்கள்.

இந்த குவிய தூரத்தினால் நாம் எடுக்கும் புகைப்படத்தில் என்னென்ன மாறுதல்கள் வரும் என்று பார்க்கலாமா?? பொதுவாக குவிய தூரம் கம்மியாக இருந்தால் நமக்கு முன் பரந்து விரிந்த காட்சியை காமெராவினுள் அப்படியே பதிக்கலாம். சுற்றி உள்ள விஷயங்கள் எல்லாவற்றையும் திறந்த கோணத்தில் திரைக்குள் சேர்ப்பதால் இதை வைத்து கிட்டேயிருக்கும் பொருளை எடுத்தால் கூட அது தூரத்தில் இருப்பது போல் தெரியும். அதனால் குறைந்த குவிய தூரம் உடைய லென்ஸ்களை wide angle lens என்று அழைப்பார்கள்.

லென்ஸின் குவிய தூரம் அதிகமாக அதிகமாக focus செய்யும் பொருட்கள் எல்லாம் பெரியதாக ஆகிக்கொண்டே போகும். அதனால் சிறிய பொருட்களை எல்லாம் பிடிக்க அதிக குவிய தூரம் உள்ள மேக்ரோ லென்ஸ்களை பயன்படுத்துவார்கள்.அதுவுமில்லாமல் தூரத்தில் இருக்கும் பொருள் அருகில் தெரிய வேண்டுமென்றால் குவிய தூரம் அதிகம் உள்ள லென்ஸ் தேவை. இந்த வகை லென்ஸ்களை telephoto lensஎன்று சொல்லுவார்கள்.

நாம் பயன்படுத்தும் point and shoot கேமராக்களில் 30-40 இல் இருந்து சுமார் 150mm மில்லிமீட்டர் வரை உள்ள zoom lens பொருத்தப்பட்டிருக்கும். எல்லாம் அந்தந்த கேமராவையும் அதின் zoom range-ஐயும் பொருத்தது. இப்பொழுதெல்லாம் 12x-15x point and shoot கேமராக்கள் எல்லாம் வர ஆரம்பித்து விட்டன. இவற்றின் குவிய அளவு 400-450mm வரை செல்லும். பொதுவாக மக்கள் SLR வாங்கினாலே அதில் நன்றாக zoom செய்ய முடியும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. SLR வாங்கினால் கூட அதிக குவிய தூரம் உள்ள லென்ஸ்கள் இருந்தால் தான் உங்களால் அதிகமாக Zoom in செய்ய முடியும்.

DOF : இது புகைப்பட வல்லுனர்கள் பலராலும் தான் ரொம்ப விஷயம் அறிந்தவர் என்று காட்டிக்கொள்ள பயன்பட்டுத்தப்படும் வார்த்தை!! :-)
ஏதாவது நல்ல படம் என்றால் ஆனா ஊனா உடனே,"படம் செம DOF" என்று பிலிம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்!!

அது சரி!! இந்த உண்மையில் இந்த DOF என்றால் என்ன???
DOF என்பது "Depth of field" என்பதன் சுருக்கம்.தமிழில் இதை காட்சியின் ஆழம் என்று சொல்லலாம்.
நாம் ஒரு படத்தை எடுக்கும் போது கேமராவின் முன்னே பல பொருட்கள் பல தூரங்களில் கொட்டிக்கிடக்கும். ஆனா படத்துல எல்லாமே தெளிவா தெரிவதில்லை, ஒரு குறிப்பிட்ட தூரத்துல இருக்கற சில பொருட்கள் மட்டும் தான் தெளிவா தெரியுது. அப்படி தெளிவா தெரியற பொருள் படத்தின் கருப்பொருளாக (subject) இருந்தால் படத்துக்கு அழகு. இப்படி நமக்கு வேண்டிய காட்சி மட்டும் தெளிவாக தெரிந்து மற்ற விஷயங்கள் எல்லாம் மங்கலாக தெரிந்தால் படத்தின் காட்சி ஆழம் கம்மி என்று சொல்லுவார்கள் (Shallow depth of field). படத்துல எவ்வளவோ விஷயம் இருந்தால் கூட எந்த பகுதி தெளிவா இருக்கோ அங்கே தான் நம் கண்கள் தானாக செல்லும்.

நம் கருப்பொருளின் பின்னால் (background) நம் கவனத்தை சிதறடிக்கும் வண்ணம் பல விஷயங்கள் இருந்தாலும் நான் நம் கருப்பொருளின் மேலே மட்டும் காட்சியின் ஆழம் அமையுமாறு வைத்தால் படம் அழகாக இருக்கும்.

இந்த shallow depth of field எல்லா படங்களுக்கும் நல்லா இருக்கும் என்று சொல்ல முடியாது. இயற்கை காட்சிகள் போன்று பரந்து விரிந்த காட்சிகள் எடுக்கும் போது படத்தில் எல்லா பொருளின் மேலும் தெளிவு சீராக பரவியிருக்க வேண்டும். அந்த மாதிரி சமயத்துல காட்சியின் ஆழம் எல்லா தூரங்களிலும் பரவி இருப்பது போல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு வேண்டிய காட்சி தெளிவாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த சிந்தாந்தத்தின் நோக்கமே!!
சரி!!
இந்த காட்சியின் ஆழத்தை எப்படி கட்டுபடுத்துவது???
அதற்கும் சில உத்திகள் புகைப்படக்கலையில் உண்டு. நாம் நமது கருப்பொருளின் பக்கத்தில் எவ்வளவுக்கெவ்வளவு போகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு காட்சியின் ஆழம் கம்மியாகும். அதாவது நமக்கும் பொருளுக்கும் உள்ள தூரத்தை விட பொருளுக்கும் background-இற்கும் உள்ள தூரம் அதிமாக இருக்க வேண்டும்!!
புரியுதா???
அது ஒரு உத்தி!!
அதனால் தான் நாம் ஒரு பூவின் பக்கத்தில் போய நன்றாக zoom செய்து படம் எடுத்தால் அதின் காட்சி ஆழம் கம்மியாக வந்து விடும்.

இரண்டாவது உத்தி நான் போன பகுதியிலே சொன்னது போல லென்ஸின் துளை(aperture) சம்பந்தப்பட்டது. அதாவது துளையின் விட்டம் எவ்வளவுக்கெவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு காட்சியின் ஆழம் கம்மி. லென்ஸின் f-stopகம்மியாக கம்மியாக துளையின் விட்டம் அதிகமாகும் என்று நான் போன பதிவில் சொன்னதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்!! :-)

இப்படியாக காட்சியின் ஆழத்தை கட்டுப்படுத்தி படங்களின் தரத்தை நிர்ணயிக்கலாம்!!!

நன்றி.........பிட்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF