welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Wednesday 6 June 2012

படம் செய்ய விரும்பு - பாகம் 1 - F-STOP என்றால் என்ன??


வணக்கம் மக்களே!!

நல்ல படங்கள் எடுக்கனும்னு நம்ம எல்லோருக்குமே நிறைய ஆசைதாங்க,ஆனா அது பத்தி கொஞ்சம் கத்துக்கலாம்னு பாத்தா நம்ம பசங்க டெக்னிகலா என்னென்னமோ பேசி நம்மல மூட் அவுட் பண்ணீருவாய்ங்க!! எத்தனை இணையதளம் பாத்திருக்கோம்??எத்தனை புகைப்பட 
ஆர்வலர்களை சந்திச்சிருப்போம்???

 எங்கிட்டு போனாலும் Aperture,shutter,ISO அப்படி இப்படின்னு டஸ்ஸு புஸ்ஸுன்னு பேசி நம்மள வெரட்டி
விட்டுருவாய்ங்க!!!
அப்படி அவிங்க என்னதான் சொல்ல வரானுங்க அப்படின்னு சில அடிப்படையான சொற்களின் அர்த்தங்களை பார்க்கலாமா???
ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடறேங்க!! புகைப்படத்துறையை பொருத்த வரை எல்லாமே ஒளி சார்ந்தவை. நாம் எடுக்கும் புகைப்படங்கள் உண்மையாகவே பொருட்கள் அல்ல,பொருட்கள் மேலே பிரதிபலிக்கும் ஒளி தான். ஒரு கதவு (Shutter) வழியாக ஒளியை ஒருசில நேரம் லென்ஸ் வழியாக உள்ளே விட்டு அதை ஃபிலிமிலோ அல்லது டிஜிட்டல் சென்சரிலோ பதியச்செய்வது தான் புகைப்படத்துறையின் அடிப்படை.
இப்படி ஒளியை நாம் கேமராவில் பதிக்கும் பொழுது மூன்று விதங்களால் அதன் பதியும் திறன் மாற வாய்ப்பு உண்டு.

முதல் விஷயம் கேமராவின் லென்ஸின் விட்டம்(diameter)். விட்டத்தின் அளவிற்கேற்ப ஒளி உள்ளே வரும் அளவு மாறுபடும். விட்டம் அதிகமானால் ஒளி அதிகம் வரும்,கம்மியானால் ஒளியும் கம்மியாகிவிடும். 
அதே போல் ஒளியை தடுத்துகொண்டிருக்கும் கதவை (shutter) திறந்து மூடும் வேகம இன்னொரு காரணி். ஒரு நொடிக்குள் திறந்து மூடிவிட்டால் குறைந்த அளவு ஒளியே உள்ளே வரும்,அதிகமாக திறந்து வைத்திருந்தால் அதிகமான ஒளி வரும்.இதனால் படம் சரியான வெளிச்சம்,நிறம் எல்லாம் சரியாக விழுவதற்கு கதவை திறந்து மூடும் வேகம் ஒரு முக்கியமான விஷயம்.
மூன்றாவது படச்சுருளின் தரம்.சில படச்சுருள்கள் குறைந்த அளவு ஒளியையே நன்றாக பதிவு செய்து விடும்,அதிகப்படியான ஒளி இருந்தால் படம் வெளிரிப்போய்விடும். இரவு நேரங்களில் படம் எடுக்க இது போன்ற படச்சுருள்கள் மிகவும் உபயோகமாக இருக்கும். சில படச்சுருள்களின் மேல் அதிகப்படியான ஒளி இருந்தால் தான் படம் ஒழுங்காக பதியும்.

சரி!! இப்போதான் எல்லார்கிட்டேயும் டிஜிட்டல் கேமரா வந்துருச்சே!!! அதுல இந்த விஷயமே கிடையாதே அப்படின்னு கேக்கறிங்களா?? இது பத்தி மேல நான் ISO பத்தி சொல்லும்போது சொல்றேன்.
இப்போ கேமராக்கள் குறித்து அடிக்கடி விவாதிக்கப்படும் சொற்கள் சிலவற்றை பார்ப்போமா??
Shutter Speed: நான் முன்னமே சொன்னது போல,கேமராவின் உள்ளே விடப்படும் ஒளியை கட்டுப்படுத்த ,கதவு திறந்து மூடப்படும் நேரத்தை
கூட்டியோ குறைக்கவோ செய்வார்கள்.நொடிப்பொழுதில் நடந்து முடியக்கூடிய விஷயங்களாக இருந்தால் அவற்றை அதிவேக Shutter speed-ஓடு எடுப்பார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் தெறிக்கும் தண்ணிர், மோட்டார் ரேஸ்,பறக்கும் பூச்சி போன்ற காட்சிகளுக்கு கதவு நொடிப்பொழுதில் திறந்து மூடினால் அந்த நொடியில் நடந்த நிகழ்வு தெளிவாக படத்தில் பதியும். இப்படி செய்யும் போது ஒளி உள்ளே 
வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் நீங்கள் எடுக்கும் காட்சி வெளிச்சமாக இருக்குமாரு பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு.

அதி வேக shutter speed-ஐ போல சில சமயங்களில் கதவு மிக மெதுவாக திறந்துமூடுமாறு வைப்பதும் ஒரு சுவாரஸ்யமான புகைப்பட உத்தி. பல நொடிப்பொழுதுகள் கதவை திறந்து வைத்தால் அந்த சமயத்தில் உள்வரும் ஒளி அனைத்தும் ஒரு வித்தியாசமான காட்சியை நமக்கு காட்டும்.

இந்த சமயத்தில் சற்றேனும் நகர்வு இருந்தால் கூட படம் ஷேக் ஆகி விடும் என்பதால் slow shutter speed காட்சிகள் பெரும்பாலும்tripod-இன் உதவியுடன் எடுக்கப்படும்.
அது சரி!! ட்ரைபாட் என்றால் என்ன என்று கேக்கறீங்களா??

அதாங்க!! ஸ்டூடியோல எல்லாம் கேமராவை ஏதோ ஒரு குச்சியின் மேலே வெச்சிருப்பாங்களே!! அந்த குச்சியின் பெயர் தான் ட்ரைபாட்.
இப்பொழுதெல்லாம் பெரும்பாலான கேமராக்களில் Shutter mode(TV mode) என்று படம் எடுக்கும் முறை இருக்கும். கேமராவை அதில் மாற்றிக்கொண்டால் எவ்வளவு நேரம் கதவு திறந்திருக்க வேண்டும் என்று நாமே முடிவு செய்துக்கொள்ளலாம். அதற்கேற்ப லென்ஸின் விட்டத்தை கேமராவே கண்டுபிடித்து மாற்றிக்கொள்ளும்.
Aperture: ஒரு கேமராவில் ஒளியை கட்டுப்படுத்த பயன்படும் அடுத்த முக்கியமான விஷயம் லென்ஸின் விட்டம்.
Aperture என்பதற்கு ஆங்கிலத்தில் துளை என்று பொருள் கொள்ளலாம்.லென்ஸிற்கு முன்பு ஒரு வட்டமான,சுருங்கி விரியக்கூடிய திரையின் துணையோடு 
ஒரு துளை போன்ற அமைப்பு ஒன்று இருக்கும். இதை பெரியதாக்கி சின்னதாக்கி லென்ஸிற்கு வரும் ஒளியின் அளவை கட்டுப்படுத்தலாம். இந்த விட்டத்தின் அளவிற்கு ஏற்ப படங்கள் வித்தியாசமாக வெளிவரும். பொதுவாக அகலமான விட்டம் இருந்தால் படங்களில் DOF (இதை பற்றி பின்னர் பார்க்கலாம்) நன்றாக வரும்.உங்களுக்கு துளை பெரியதாக வேண்டும் என்றால் அதிகப்படியாக வரும் ஒளியை கட்டுப்படுத்த, கதவு திறந்து மூடும் வேகத்தை அதிகமாக்கி விடலாம். அதேபோல் துளை சிறியதாக இருந்தால் வேகத்தை குறைத்து ஒளி நிறைய நேரம் உள்ளே வருமாறு ஏற்பாடு செய்யலாம்.

உங்கள் கேமராவில் இருக்கும் Aperture Mode-ஐ உபயோகித்தால் உங்களுக்கு வேண்டிய அளவிற்கு துளையின் அளவை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதற்கேற்ற கதவின் வேகத்தை கேமராவே கூட்டி பெருக்கி செட் செய்து கொள்ளும்.

f-Number அல்லது fstop :நிறைய இடங்களில் இந்த வார்த்தையை வெச்சுக்கிட்டு எல்லோரும் செமத்தியா சீன் போட்டுகிட்டு இருப்பாய்ங்க!!! இந்த f-number-னா என்னன்னு பார்க்கலாமா???
சுருக்கமா சொல்லனும்னா இந்த f-number என்பது நம்ம லென்ஸ் துளை விட்டத்தின் அளவுகோள் என்று சொல்லலாம். f-Number அதிகமாக ஆக துளையின் விட்டம் சிறியதாகிக்கொண்டே போகும். அதாவது ஒரே லென்ஸில் f1.2-ஐ விட f5.6-இல் துளை சிறியதாக இருக்கும்.f நெம்பரில் ஒவ்வொரு புள்ளி கூட கூட துளையின் விட்டம் பாதியாக குறைந்துக்கொண்டே போகும். அதாவது f1.0-இல் இருப்பதை விட f2.0-இல் துளையின் விட்டம் பாதியாக இருக்கும். இப்படி விட்டத்தை குறைத்துக்கொண்டே போனால் உள்வரும் ஒளி குறையும் அல்லவா.அதனால் கதவின் வேகம் அதற்கேற்றார்போல் மாற்றப்படும். உதாரணத்திற்கு ஒரு லென்ஸின் f அளவை f1.0-இல் இருந்து f2.0ஆக மாற்றினால் அதன் துளை யின் அளவு பாதியாக குறையும் அல்லவா ,அதனால் கேமராவின் ஷட்டர் திறந்திருக்கும் நேரம் இரண்டு மடங்காக்கினால் தான் முன்பு கிடைத்த அதே அளவு ஒளி கிடைக்கும்.

உங்கள் கேமராவை Manual Mode-இல் பொருத்திக்கொண்டால் துளையின் அளவு,கதவு திறந்து மூடப்படும் வேகம் ஆகியவற்றை நீங்களே தனித்தனியே தீர்மானித்துக்கொள்ளலாம். அதுவே Automatic mode-இல் இருந்தால் ,கேமராவில் உள்ள light meter ஒளியின் அளவை ஊகித்து அதற்கேற்றார்போல் துளையின் விட்டம் மற்றும் ,கதவின் வேகத்தை தானே தீர்மானித்துக்கொள்ளும். நம்மில் பெரும்பாலனவர்கள் இதை நம்பித்தான் படம் எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

f-stop-க்கும் f-number-க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்,கேமராக்களில் பொதுவாக f1.0,f2.0 போன்ற முழுமையான அளவுகள் இருக்காது.கேமராக்களில் f2.8,f5.6 போன்ற அறைகுறை என்களில் f-Number-கள் உருவாக்கப்பட்டிருக்கும். இதைத்தான் f-stop என்கிறார்கள்.
fstop is nothing but a discrete rounding off of f-numbers 
கணக்குல ஆர்வம் இருக்கறவங்களுக்கு ஒரு சமன்பாடு இதோ!! 

f1 = Focal length of the lens (லென்ஸின் குவிய தூரம்) / Diameter of the lens (லென்ஸின் விட்டம்).

இதன்படி பார்த்தால் எப்பொழுது ஒரு லென்ஸின் குவிய தூரம் (focal length),அதன் விட்டத்தோட சமமா இருக்கோ அப்போ லென்ஸ் f1-இல இருப்பதாக சொல்லுகிறோம். லென்ஸின் விட்டத்தை நாம் குறைக்க குறைக்க f-number-இன் புள்ளி கூட்டிக்கொண்டே போகிறது!!
புரியுதா???
ஹ்ம்ம்ம் !! இருங்க திரும்ப ஒரு முறை படிச்சுட்டு சொல்றேன் என்கிறீர்களா?? ஒரு தடவைக்கு நாலு தடவை படிச்சு பாருங்க!! சந்தேகம் இருந்தா பின்னூட்டத்துல கேளுங்க!! 
அதெல்லாம் சரிபா!! இந்த குவிய தூரம்(focal length) என்றால் என்னன்னு கேக்கறீங்களா???
அது ஒரு தனி கதை மக்களே,வேணும்னா அடுத்த பகுதியில சொல்றேன்!!சரியா???
அப்படியே DOF,ISO,White balance இதெல்லாம் என்னன்னும் பாக்கலாம் !! சரியா???
போறதுக்கு முன்னாடி ஒரு கொசுறு செய்தி. இந்த லென்ஸ் பற்றி பேசும்போது 18-55mm என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள் அல்லவா.இந்த குறியீடுகள் எல்லாம் இந்த குவிய தூரத்தின் அளவுகள் தான்!! :-)

நன்றி.........http://photography-in-tamil.blogspot.in/

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF