"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி" என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள், இன்றைய இளைஞர்களிடம்தான் நாளைய இந்தியாவின் எதிர் காலமே உள்ளது என்பதை அழுத்தமாகப் பாடியுள்ளார்.
தாயும் சேயும் |
தன்னைவிட தன் மகன் அல்லது மகள், அவர்களது வாழ்க்கையில் நன்றாக வாழ வேண்டும் என்றே ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள்.
பெற்றோர்கள் ஒரு சாதாரண பள்ளியில்தான் படித்திருப்பார்கள்.. ஆனால் இன்று தங்களது மகனை ஒரு ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் (Convent)படிக்க வைப்பார்கள்.
அவர்களுக்கு அணிய நல்ல உடைகள் கூட இருக்காது. இருப்பினும் தங்களது குழந்தைகளுக்கு நல்ல உடையும், உணவும் எப்படியாவது கொடுத்து பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.
பள்ளி செல்லும் குழந்தைகள் |
அவர்களின் கனவுகளையும், ஏக்கங்களையும் நிறைவேற்ற வேண்டியது நமது கடமையல்லவா?
இருபது வயதை அடைந்ததும் உனக்கென ஒரு லட்சியத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். உன்னுடைய சொந்த எதிர்காலத்தைப் பற்றிய முடிவுக்கு நீதான் வரவேண்டும்.
(இன்று இந்திய தேசத்தின் உயரியதொரு விருதான பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கும் சச்சின் டெண்டுல்கர். இவரின் அயராத உழைப்பும், குறிக்கோளும், பாரத ரத்னா விருது வழங்கும் விதிமுறைகளையே சற்று மாற்றி அமைக்கும் அளவிற்கு இவரது சாதனைகள் தொடர்கின்றன. அதுபோலவே ஒவ்வொரு இளைஞனும் தன்னுடைய துறையில் சாதிக்க முடியும். )
சச்சின் டெண்டுல்கர் - கபில்தேவ் |
இருபது வயது முதல் முப்பது வயது வரை உள்ள ஆண்டுகளே உன்னுடைய வாழ்க்கைக்கு அஸ்திவாரமிடும் காலகட்டமாகும். இந்த கால கட்டத்தில் நீ மட்டும் சரியாக ஒரு அடிப்படையை அமைக்கவில்லையெனில் உனது பிற்கால வாழ்வே வீணாகிவிடும்.
இசைத்துறையில் பரிமளித்த ஏ.ஆர். ரஹ்மான் |
நிகழ்காலத்தைவிட உனது எதிர்கால வாழ்க்கையைப் பற்றியே எப்போதும் மனத்தில் நினைக்க வேண்டும்!
"விதை நெல்லை ஒருவன் சமைத்து சாப்பிட்டு விட்டால் பின்பு எங்ஙனம் தனது நிலத்தில் விதையை விதைத்து அறுவடை செய்ய முடியும்? என்பதை எப்போதும் உன் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சிறந்த திறமைசாலிகளான எத்தனையோ இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையை காதல், கும்மாளம், டான்ஸ், குடிப்பழக்கம், விளையாட்டு என்று, அளவிற்குமேல் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை, அவர்களே அழித்துக் கொள்கிறார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள்.
சிறுவயதில் தைத்த உன்னுடைய சட்டையைவிட உடல் எவ்வாறு வளர்ந்துள்ளதோ, அவ்வாறே தற்போதைய வேலைக்கு வேண்டியதைவிட உன்னுடைய திறமையையும் உழைப்பும் அதிகமாக இருக்க வேண்டும்.
எப்போதும் உனக்காகக் கொடுக்கப்பட்ட வேலையைவிட சற்று அதிகமாக செய்தீர்கள் என்றால் அதுவே உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். கடின உழைப்பில் முன்னேறியவர்கள் உலகில் எத்தனையோ பேர்.. ஓர் நிறுவனத்தில் சாதாரண தொழிலாளியாக சேர்ந்து பிறகு அந்நிறவனத்திற்கு முதலாளி ஆகியவர்களும் இருக்கிறார்கள். காரணம் சரியான குறிக்கோளும், கடினமான உழைப்பும் தான்.
இங்கே ஒர் வறுமை சிகரமாயிருக்கிறது..!!!
அணு விஞ்ஞானி திரு. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் |
எனவே அன்பு நண்பர்களே.. !
வறுமை எப்போதும் முன்னேற்றத்திற்கு தடையல்ல.. ! உங்கள் வாழ்கையை அமைத்துக்கொள்ள வறுமை ஒரு தடையே அல்ல...!! உணர்வீர்கள்..! சிந்தித்து செயல்படுவீர்கள்..!!
நன்றி நண்பர்களே..!! மற்றுமொரு இனிய பதிவின் வழி சந்திப்போம்..!!!
தங்கம்பழனி
|
No comments:
Post a Comment