welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Thursday, 10 May 2012

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய Basic Keyboard Shortcuts



இதில் ஒரு விஷயம், ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய ஒன்றுக்கும் மேற்ப்பட்ட Keyboard Shorcut - கள் உள்ளன. அவற்றைப் பற்றி காண்போம்.

Ctrl + C or Ctrl + Insert


ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை நாம் Copy செய்ய பயன்படுகிறது. 

Ctrl + V or Shift + Insert


Select அல்லது Highlight செய்த டெக்ஸ்ட்டை நமக்கு வேண்டிய இடத்தில் paste செய்ய உதவுகிறது. 

Ctrl + Z and Ctrl + Y


இதில் CTRL+ Z undo என்ற இந்த வசதி, நீங்கள் தற்போது இருக்கும் நிலைக்கு முந்திய நிலைக்கு செல்ல உதவுகிறது. அதாவது ஒரு கோப்பில் தவறுதலாக ஒரு வார்த்தையை நீங்கள் எடுத்து விட்டால், அதை மீண்டும் கொண்டு வர உடனடியாக இதை நீங்கள் செய்யலாம். அடுத்த CTRL+Y ஆனது Redo வசதியை தருகிறது. இது நீங்கள் தவறுதலாக Undo செய்தவற்றை Redo செய்து விடும். 

Ctrl + F


குறிப்பிட்ட கோப்பு, போல்டர், இணைய உலவியில் உங்களுக்கு தேவையான வார்த்தை போன்று தேட உதவுகிறது. 

Alt + Tab or Alt + Esc


நீங்கள் இயங்கி கொண்டுள்ள ப்ரோக்ராம்களுக்கு வேகமாக செல்ல உதவுகிறது. இதில் Alt+Tab மூலம் குறிப்பிட்ட ஒன்றுக்கு செல்லலாம்.Alt + Esc மூலம் ஒவ்வொன்றுக்கும் வரிசையாக செல்ல முடியும். 

இதில் சில இன்னும் சுவாரசியமான டிப்ஸ் உள்ளன. 

CTRL+ Tab - குறிப்பிட்ட Program-இல உள்ள வெவ்வேறு Tab-களுக்குள் மாறிக் கொள்ளலாம். உதாரணம் Firefox, Chrome. 

Alt+ Tab Forward ஆக ப்ரோக்ராம்களை காட்டினால், Alt+Shift+Tab இதை பின்னால் இருந்து காட்டும். நிறைய வேலைகளை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு இது பொருந்தும். 

Windows 7 , Vista பயனர்கள் Alt+Tab வேலையை Windows Key+Tab மூலம் செய்யலாம். இது முழு ஸ்க்ரீனில் திரைகளை காட்டும். இது அழகாக இருக்கும். 

Ctrl + Back space and Ctrl + Left or Right arrow


Ctrl + Back space ஆனது ஒரு முழு வார்த்தையை நீக்க பயன்படுகிறது. 

Ctrl + Left or Right arrow ஆனது ஒரு கோப்பில் ஒவ்வொரு எழுத்தாக நகராமல், வார்த்தையாக நகர்த்த பயன்படும். இதனுடன் சேர்த்து Shift Key ஐ அழுத்தினால் குறிப்பிட்ட வார்த்தையை தெரிவு செய்யலாம். 

Ctrl + S


குறிப்பிட்ட ஒரு கோப்பை சேமிக்க பயன்படுகிறது. 

Ctrl + Home or Ctrl + End


ஒரு கோப்பில் உங்கள் Mouse Cursor - ஐ கோப்பின் cursor இருக்கும் வரியின் ஆரம்பம் மற்றும் முடிவுக்கு செல்ல உதவுகிறது. 

Ctrl + P


பிரிண்ட் செய்யும் வசதிக்கு இது. 

Page Up, Space bar, and Page Down


Page Up மற்றும் Page Down நீங்கள் இருக்கும் பக்கத்தில் மேலே அல்லது கீழே செல்ல பயன்படுகிறது. 

Space Bar இணையத்தில் உலவும் போது ஒரு பக்கத்தில் இருக்கும் போது கீழே செல்ல உதவுகிறது, Shift+Space Bar மேலே செல்ல உதவுகிறது. 


நன்றி...... http://www.karpom.com/

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF