welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Thursday, 1 March 2012

`புகைப்படங்களில் நேர்த்தி..

வணக்கம் நண்பர்களே....

நீண்ட இடைவெளிக்கு பிறகு `புகைப்படங்களில் நேர்த்தி` என்கிற புதிய தலைப்பின் வழியாக உங்களை சந்திப்பதில், பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்...

இன்றைக்கு கிட்டதட்ட அனைவரிடத்திலும் ஏதோ ஒரு வடிவில் கேமரா என்பது நம்மிடம் இருப்பது உறுதி..

ஒரு சிலர் , முதன் முதலில் வாங்குகின்றோம் , நல்லதாக வாங்கிவிடலாம் என்று தனக்கு சம்பந்தமில்லாத , தேவையில்லாத விலை அதிகமான கேமராக்களை ஆர்வத்தில் வாங்கிவிடுவார்கள்..ஆனால் அவர்களுக்கு நன்றாக படம் எடுக்க தெரியாது...

சரி நமக்கு அவ்வளவு தான் தெரியும் என்று படம் எடுக்க விருப்பப்படமாட்டார்கள்.. அவ்வளவு தான், கேமரா சும்மா வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும்..


அதே சமயம் விலை குறைவான கேமராக்களை வைத்திருப்பவர்கள், தான் தவறாக எடுத்த படங்களை பார்த்து, இந்த கேமராவில் இவ்வளவு தான் எடுக்க முடியும் என்று தாழ்வு மனப்பான்மையுடன் மேலும் படம் எடுக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள்...

ஆனால் நல்ல படம் என்பது கண்டிப்பாக விலை அதிகமான கேமராவை வாங்குவதில் மட்டும் இல்லை என்பதை கீழே உள்ள படங்களை பார்த்தால் புரியும்..

இந்த படங்கள் 9000 ரூபாய் சிறிய கேமராவில் தான் எடுத்தது...





எனவே நல்ல படம் என்பது கேமராவில் மட்டுமல்ல ,எடுப்பவரின் கையிலும் உள்ளது..

2 லட்ச ரூபாய் கேமராவில் கொஞ்சம் தவறாக எடுக்கும் படத்தை விட 2 ஆயிரம் ரூபாய் கேமராவில் சரியாக எடுக்கப்படும் படம் சிறந்ததாக தான் இருக்கும்.. இதற்கு உதாரணங்கள் கீழே உள்ள படங்கள்.


இந்த படம் -1 40000 ரூபாய் கேமரா மற்றும் 40000 ரூபாய் லென்ஸில் எடுக்கப்பட்டது... இந்த படம் சற்று blur ஆக எடுக்கபட்டுள்ளதை இந்த சிறுவனின் முகத்தில் தெரியும்.. படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்..

(படம்-1)


ஆனால் அதே சிறுவன்,அதே இடத்தில், அதே நேரத்தில் 9000 ரூபாய் சிறிய கேமராவில் சரியாக(என்னால் முடிந்த அளவு) எடுக்கப்பட்டுள்ளதை இந்த படத்தை(படம்-2) பார்த்தால் புரியும்


(படம்-2)



ஒரு சில நேரங்களில் சின்ன sensor கேமராக்கள் தரும் சில சிறப்பம்சங்கள் (அதிக depth of field, macro close focusing etc.) பெரிய கேமராவில் கிடைக்காது என்பதை கீழே உள்ள படங்களை பார்த்தால் புரியும்...


இந்த படம் (படம்-3) 9000 ரூபாய் சிறிய கேமராவில் எடுத்தது.. இந்த தும்பியின் உடல் முழுவதும் டீடெய்ல்ஸ் இருக்கும்... இதன் காரணம் சிறிய கேமராவில் இருக்கும் அதிக depth of field ஆகும்.. இதை பற்றி பின் வரும் தொடர்களில் பார்க்கலாம்..

(படம் - 3 )



இந்த (படம் -4) 40,000 ரூபாய் கேமரா மற்றும் 40,000 ரூபாய் லென்ஸில் எடுக்கப்பட்டது... இவ்வளவு விலை இருந்தாலும் தும்பி பூச்சியின் தலையில் மட்டும் தான் டீடெயில்ஸ் இருக்கின்றது...


(படம் - 4)



அதற்காக பெரிய கேமராக்கள் தேவையில்லை என்று அர்த்தமில்லை.. நாம் நன்றாக எடுத்தால் சிறிய கேமராக்களும் நன்றாக படம் எடுக்கும்...

புதிதாக கேமரா வாங்குபவர்கள் கேமராவில் மலை போல் இருக்கும் settings ஐ பார்த்து பயந்து போய் இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது என்று சிம்பிளாக auto mode ல் போட்டு படமெத்துக்கொண்டு திருப்திப்பட்டுக்கொள்வார்கள்..

ஒரு சிலர் பெரிய zoom கேமரா/ லென்ஸ் வைத்துக்கொண்டு zoom பட்டனைக்கூட சரியாக பயன்படுத்தாமல் wide angleலேயே படமெடுப்பார்கள்.. இதனால் அந்த மாதிரி கேமராக்களை வாங்குதில் அர்த்தமில்லாமல் போய் விடுகின்றது..

இந்த மாதிரி எல்லாம் தவறுதலாக படம் எடுக்கும் போது நாம் புதுமையாக படம் எடுக்கவோ, கற்றுக்கொள்ளவோ வழியில்லை என்று சொல்லலாம்..

இப்படி பல குறைகள் தீர இத்தொடர் உதவும் என்று நம்புகின்றேன்..

ஒரு நல்ல படம் அமைய வேண்டுமென்றால், முக்கியமாக கவனிக்கவேண்டியது என்று மூன்று விதமாக பிரித்துக்கொள்ளலாம்..

1. படம் எடுப்பதற்கு முன்

கேமராவை எப்படி செட்டிங்ஸ் செய்வது , அதாவது exposure , ISO , white balance , aperture , shutter speed zoom எப்படி பயன்படுத்துவது,கேமராவை எப்படி கையாள்வது என்பதை பற்றி பார்க்கலாம்..


2. படம் எடுக்கும் போது

சரியாக ஃபோகஸ் செய்வது எப்படி , back ground எப்படி , focal length பயன்படுத்துவது , blur இல்லாமல் எடுப்பது, கம்போஸிசன் போன்றவற்றை பற்றி பார்க்கலாம்..


3. படம் எடுத்த பின்

இன்றைய டிஜிட்டல் கேமரா உலகில் படம் எடுக்கும் போது எவ்வளவு முக்கியமாக கவனிக்க வேண்டுமோ ,அதே அளவுக்கு post processing(குறைந்தபட்சம்) என்பதும் முக்கியமே..

இதில் முக்கியமான எளிதான cropping , contrast , sharpening ஆகியவற்றின் முக்கியதுவம் பற்றியது..


முதலில், படம் எடுப்பதற்கு முன் கவனிக்கவேண்டியதை அடுத்து பகுதியில் இருந்து பார்ப்போம்...

நன்றி-கருவாயன் ..........பிட் போட்டோகிராபி...

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF