welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Friday, 23 December 2011

போட்டோஷாப்பில் தமிழ் யூனிக்கோட் எழுத்துரு ..

வணக்கம் நண்பர்களே!! முன்பெல்லாம் தமிழ் தட்டச்சு தெரிந்தால் மட்டுமே தமிழில் எழுதும் வாய்ப்பு இருந்து வந்தது கணினியில் அதிலும் எழுத்துரு பிரச்சினை பல தளங்களில் இப்பவும் இருக்கிறது ஆனால் அந்த பிரச்சினையை முற்றிலும் களைய வந்தது தான் யூனிக்கோட் எழுத்துரு முறை இந்த வகையில் எழுத்துரு பிரச்சினை வருவதில்லை இன்று தமிழில் இனைய பக்கங்கள் அதிகமாக வளர்ந்து வருவதற்கும் இந்த தமிழ் யூனிக்கோட் எழுத்துரு மிக முக்கிய காரணமாகும்.

இப்பவும் யூனிக்கோட் முறை தெரிந்தாலும்
அதை நேரடியாக போட்டோஷாப்பில் பயன்படுத்த முடியாது இருப்பினும் சில நண்பர்கள் சில வகை மென்பொருள்களை பயன்படுத்தி போட்டோஷாப்பில் தமிழ் உள்ளிட முடியும் என்றாலும் அவசியம் தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் இந்த முறை எல்லோருக்கும் நிச்சியமாய் வசதியாய் இருக்காது அதிலும் பல வகையான எழுத்துருக்குள். உதாரணமாக: Bamini, Shreelipi, Tab, Tam, TSCII, Vanavil, Senthamiz இப்படி நிறைய இருக்கிறது.

இனி விஷயத்திற்கு வருகிறேன் நீங்கள் போட்டோஷாப்பில் அல்லது மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்புகளில் தமிழ் யூனிக்கோட் எழுத்துருக்களை பயன்படுத்தி விதவிதமான எழுத்துருக்களுக்கு மாற்றி அமைத்துக் கொள்வதுடன் போட்டோஷாப்பில் கிட்டத்தட்ட 512 வகையான தமிழ் ஃபாண்ட்களை நீங்கள் உபயோகிக்க முடியும் ஆனால் நான் கொடுத்திருக்கும் இந்த பொதியில் கிட்டதட்ட 800 வகையான தமிழ் ஃபாண்ட்கள் இருக்கிறது மேலும் இதில் மைக்ரோசாப்ட் டிபால்ட் (Default) ஃபாண்ட்களும் இருக்கிறது அதில் 512 தமிழ் ஃபாண்ட்களை பயன்படுத்த உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரியவேண்டிய அவசியமில்லை அதுதான் இந்த பதிவின் விஷேசம்.

எல்லாவற்றையும் தனித்தனியாக பிரித்து எடுத்து தருவதில் சிரமம் இருந்ததால் மொத்த ஃபாண்டுகளையும் ஒரு பொதியாய் சேர்த்து விட்டேன் எனவே காப்பி எடுத்து உங்கள் ஃபாண்ட் போல்டரில் (Font Folder) சேமிக்கவும் அப்படி சேமிக்கும் போது மைக்ரோசாப்ட் டிபால்ட் (Default) ஃபாண்ட்கள் முன்பே உங்கள் கணினியில் இருப்பதால் அதைப்பற்றி கவலைப்படாமல் Over Write செய்து விடவும் அதிலும் குழப்பம் இருந்தால் பாப் அப் மெனு வரும் போது ஓக்கே கொடுக்கவும். 

இனி இந்த Photoshop Tamil Unicode Fonts பொதியை தரவிறக்குங்கள் பொதியின் அளவு 185 எம்பி அளவுடையது, இந்த பொதியின் உள்ளே கிட்டதட்ட 512 தமிழ் யூனிக்கோட் ஃபாண்ட்கள், 300க்கும் மேலான தமிழ் ஃபாண்ட்கள் (உபயோகிக்க தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்), 1300க்கும் மேலான ஆங்கில வகை ஃபாண்ட்கள் இதில் பலவும் மைக்ரோசாப்ட்டின் டிபால்ட் வகையை சேர்ந்தவை, மற்றும், ஃபாண்ட் மேனேஜர், தமிழ் யூனிக்கோட் எழுதுவதற்கான NHM Writer மற்றும் யூனிக்கோட் எழுத்துருக்களை வேறு வகையான எழுத்துருக்களில் மாற்றம் செய்வதற்கு NHM Convertor மேலும் ஒரு பிடிஎப் தொகுப்பு இது மிக முக்கியமானது இதில் ஃபாண்ட் மாதிரி எழுத்து, அதன் பெயர், அது எந்த வகையான எழுத்துரு வகையை சேர்ந்த்து என்பதை தொகுத்திருக்கிறேன்.. இதை தரவிறக்கி பயன்படுத்தும் போது உங்களுக்கு மிக சாதரணமாக தெரிவதோடு எளிதாக இருக்கும் ஆனால் இதை செய்து முடிப்பதற்கு ஒரு வார காலம் தேவைப்பட்டது ஆரம்பத்தில் என் சொந்த உபயோகத்திற்காக தான் அட்டவனைபடுத்த தொடங்கினே இறுதியில் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற அடிப்படையில் உங்களுக்காகவும். 

முதலில் உங்கள் கணினியில் NHM Write இன்ஸ்டால் செய்யவும், இன்ஸ்டால் செய்யும் போது தமிழை தெரிவு செய்யவும் நீங்கள் உங்கள் கணினியில் நிறுவலை முடித்ததும் டாஸ்க்பாரின் வலது பக்க மூலையில் ஒரு மணி போன்ற ஒன்று வந்திருக்கும் அதை கிளிக் செய்து தமிழ் பொனாட்டிக் யூனிக்கோட் என்பதை தெரிவு செய்யவும் அல்லது நேரடியாக கீபோர்டில் Alt+2 என்பதை அழுத்தினால் போதும், நீங்கள் Alt+2 என்பதை அழுத்தியவுடன் அதன் நிறம் பொன்நிறமாக மாறியிருக்கும். 

இனி தமிழ் யூனிக்கோட் தட்டச்சு செய்யவேண்டியது தான் உதாரணமாக நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்பில் “ஸ்ரீராம், ஸ்ரீதர், ஞானசேகர், புரியாத கிறுக்கல்கள்”என்று தட்டச்சு செய்ய நினைக்கிறீர்கள் என்பதாக இருந்தால் ஆபிஸ் தொகுப்பை திறந்து NHM Writer ல் Alt+2 அழுத்தி அதன் பின்னர் “ஸ்ரீராம், ஸ்ரீதர், ஞானசேகர், புரியாத கிறுக்கல்கள்” என்பதற்கு நீங்கள் sriram, sridhar, gnanasekar, puriyaatha kiRukkalkaL என்பதாக தட்டச்சினால் போதும்.

புரியவில்லையா? ammaa – அம்மா, appaa – அப்பா, sakOthari- சகோதரி, இப்படி தமிழை நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுங்கள் சில இடங்களில் பிரச்சினை வரும் உதராணத்திற்குsakOthari என்பதில் O மட்டும் கேப்பிட்டல் எழுத்தை பயன்படுத்தியிருக்கிறேன் இதையே sakoothari இரண்டு o பயன்படுத்தியும் எழுதலாம், நீங்களாகவே முயற்சி செய்யும் போது எல்லாம் எளிதில் வந்துவிடும் தேவைப்பட்டால் அவர்களின் உதவிப்பக்கத்தை பார்க்கவும்.



இப்போது நீங்கள் தமிழை எழுத கற்றுக்கொண்டு வீட்டீர்கள் இனி அடுத்த கட்டமாக NHM Convertor பற்றி பார்க்கலாம், நாம் மேலே உள்ள சில பாரக்களில் பார்த்த்து போல நமக்கு தெரிந்த யூனிக்கோட் எழுத்துருக்களை இந்த NHM Convertor வழியாக Bamini, Shreelipi, Tab, Tam, TSCII, Vanavil போன்ற எழுத்துருக்களுக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் அந்த வகையான எழுத்துருக்களையும் நாம் யூனிக்கோட் வழியாக மாற்றி நாம் பயன்படுத்தலாம். மேலும் சில யூனிக்கோட் எழுதி தமிழில் எழுதுவது எப்படி?

கீழே படத்தில் இருப்பது போல Input- 1 என்பதில் உங்கள் தெரிவு Unicode எனபதாக இருக்கட்டும் (தேவைப்பட்டல் Bamini, Shreelipi, Tab, Tam, TSCII, Vanavil இவற்றை யூனிக்கோட் முறைக்கும் மாற்றிக்கொள்ளலாம்) Output – 2 என்பதில் எந்த வகையான எழுத்துருக்கு மாற்ற விரும்புகிறீர்களோ அதை தெரிவு செய்யவும், Output – 3 என்பதை கிளிக்குவதன் மூலம் கன்வெர்ட் நொடிக்குள் நடந்து முடிந்து விடும் Copy Converted text – 4 இங்கு நீங்கள் மாற்றி டெக்ஸ்ட் இருக்கும் அதை காப்பி எடுத்து உங்களுக்கு தேவையான இடத்தில் பயன்படுத்த முடியும் அது போடோஷாப்பாக இருக்கலாம், ஆபீஸ் தொகுப்பாக இருக்கலாம்.

இங்கு நேரடியாக நீங்கள் தட்டச்சு செய்யலாம் அல்லது வேறு இடத்தில் இருந்து காப்பி எடுத்தவற்றை பேஸ்ட் செய்வதன் மூலமும் கன்வெர்ட் செய்துகொள்ள முடியும்.




நன்றி..GSR.. http://gsr-gentle.blogspot.com/

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF