welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Friday, 23 December 2011

தமிழில் எழுதுவது எப்படி?

வணக்கம் நண்பர்களே!! நான் இங்கு குறிப்பிட போகும் அனைத்து மென்பொருள்கலும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க கூடியவை அதாவது நீங்கள் ஆங்கிலத்தில் ammaa என டைப் செய்தால் உங்களுக்கு அம்மா என்பதாக வரும் முதலில் உங்களுக்கு கொஞ்சம் சிரம்மமாக தெரியும் ஆனால் கொஞ்ச நாள் பழகி விட்டால் நீங்கள் ஆங்கிலத்தை தட்டச்சு செய்வது போல தமிழிலும் தட்டச்சு செய்யலாம்.

கூகுள் தமிழ் எழுதி இது இனைய ஜாம்பாவனின் தமிழ் எழுது மென்பொருள் எப்பவும்
போல இதுவும் மிகவும் பயன்படுத்த எளிமையானது தவறான வார்த்தைகள் டைப் செய்யும் போது சரியான வார்த்தைகளை நமக்கு காண்பிக்கும் இதற்கானகூகுள் உதவி பக்கம் போதிய நேரமின்மையால் நான் இதற்கான படங்கள் இனைக்கவில்லை தயவு செய்து மன்னிக்கவும் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.

மைக்ரோசாப்ட் தமிழ் எழுதி விண்டோஸ் ஜாம்பவானின் மென்பொருள் இதை பற்றியும் அதிகம் சொல்ல தேவையில்லை எதிலும் எளிமை அது இதிலும் தொடர்கிறது தவறான வார்த்தைகள் டைப் செய்யும் போது சரியான வார்த்தைகளை நமக்கு காண்பிக்கும் இதற்கானமைக்ரோசாப்ட் உதவி பக்கம் இதற்கும் படங்கள் இனைக்கவில்லை தயவு செய்து மன்னிக்கவும் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.

NHM தமிழ் எழுதி மற்ற இரண்டையும் விட இது உபயோகிப்பதற்கு எளிமையாய் இருக்கும் ஆனால் இதில் தவறாக டைப் செய்தால் திருத்தி காண்பிக்கும் வசதி இல்லை ஆனால் சிறப்பாக செயல்படும் இதற்கானNHM உதவி பக்கம் இதில் உங்கள் கணினியின் வலது பக்க மூலையில் ஒரு மணி வந்திருக்கிம் அதில் Tamil Phonetic என்பதை தெரிவு செய்து அல்லது Alt+2 அழுத்தி டைப் செய்ய தொடங்கலாம் இதற்கும் படங்கள் இனைக்கவில்லை தயவு செய்து மன்னிக்கவும் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.

திருவின் தமிழ் எழுதி இதை பற்றி விரிவாக சொலவதற்கு ஒன்றுமில்லை என சொல்லிவிட முடியாது இருப்பினும் இதையும் நீங்கள் முயற்சி செய்து பாருங்களேன் இதற்கான உதவி பக்கம் இங்கேயே இருக்கிறது இது பற்றியும் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.

அழகி தமிழ் எழுதி ஒரு நேரத்தில் பணம் செலுத்தி பெறும் மென்பொருளாக இருந்தது இப்போது இலவசமாகவே கிடைக்கிறது இதில் நிறைய வச்திகள் இருக்கின்றன ஆனால் இதில் மட்டுமே போட்டோஷாப் மென்பொருளில் தமிழை உள்ளிடும் வசதி இருக்கிறது இதற்கான் உதவி பக்கம் இந்த தளத்திலேயே இருக்கிறது மேலும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.

என்ன நன்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் மேலும் இது தெரியாத நபர்களையும் சென்றடையும் விதமாக உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்களேன்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF