welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Friday, 23 December 2011

கருப்பு வெள்ளை - கலராக மாற்றலாம்

இனி ReColor (Black and White to Color) 9எம்பி அளவுள்ள இந்த மென்பொருளை தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் இனி எப்படி கருப்பு வெள்ளை நிழல்படத்தை கலர் வண்ணப்படமாக மாற்றுவதை என்பதை கீழே பார்க்கலாம்.


 

இனி நான் மேலே கொடுத்திருந்த Recolor மென்பொருள் திறந்து வழக்கமான முறையில் பைலை திறக்கவும் இதன் வலது பக்கத்தில் ஒவ்வொன்றிற்குமான கலர் வகைப்படுத்த பட்டிருக்கும் அதன் வழியாக தேவையான இடங்களை அந்தந்த கலரை செலக்ட் செய்து பிரஷால் நான் படத்தில் காண்பித்துள்ளது போல அந்தந்த பாகத்தை சுற்றி வரைந்து விடுங்கள் ஆனால் நான் உங்களுக்கு இந்த வழிமுறையை பரிந்துரைக்க போவதில்லை கலர் செலக்ட் செய்ய எளிதாக இருக்கும் வகையில் வேறு ஏதாவது ஒரு கலர் நிழல்படத்தையும் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.

நான் இந்த வழிமுறையை பரிந்துரைப்பதன் காரணம் பொதுவாகவே முகம், கை போன்ற தோல் வெளியில் தெரியும் பாகத்தில் உங்களால் சரியான கலர் செலக்ட் செய்யமுடியாத நிலை இருக்கும் அதற்காக தான் கூடவே ஒரு கலர் நிழல்படத்தையும் திறக்க சொல்கிறேன் இனி கிழிருக்கும் படத்தை பாருங்கள் சிவப்பு நிற குறியிட்டு இரண்டு என எழுதியிருக்கும் டூல் தான் Eye Droer அந்த டூலை பயன்படுத்தி கலர் நிழல்படத்தில் உங்களுக்கு எந்த கலர் எந்த இடத்திற்கு சரியாக வரும் என நினைக்கிறீர்களோ அந்த கலரை செலகட் செய்யுங்கள் செலக்ட் செய்ய ஒரு முறை கலரை தொட்டால் போதும் அடுத்தாக சிவப்பு கட்டத்திற்குள் மூன்று என குறிப்பிட்டுருக்கிறேன் பாருங்கள் அந்த டூல் தான் பிரஷ், இனி பிரஷை பயன்படுத்தி வரைந்து விடுங்கள் உதாரணமாக முகத்திற்கான கலர் செலக்ட் செய்தாகிவிட்டது என்றால் கருப்பு வெள்ளை படத்தில் முகத்தை சுற்றி வரைந்து விடுங்கள், வரையும் போது மிகச்சரியாக துல்லியமாக இருக்க வேண்டுமென்பதில்லை ஓரளவிற்கு வரைந்தாலே போதும் இப்படிடையாக ஒவ்வொரு பாகமாக முடிந்த்தும் படத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் பின்புலத்துக்கு ஏற்றவாறு கலரை கொடுத்து விடுங்கள். நீங்கள் இபோது வரைந்த்து எப்படி இருக்கிறது என பார்க்க நினைத்தால் நான்கு என்ற எண் அடையாளபடுத்தியுள்ள டூலை கிளிக்கினால் போதும் படத்தின் பிரிவியூ பார்க்கலாம் நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் வந்துவிட்டது என்றால் படத்தை சேமித்து விடுங்கள் தேவையானால் இதன் Working File –யையும் போட்டோஷாப்பில் PSD சேமித்து வைப்பது போல சேமித்து வைக்கலாம்.



கீழிருக்கும் படத்தை பாருங்கள் எப்படியாக கலர் வரைந்திருக்கிறேன் என இதே போல ஓரளவிற்கு வரைந்தாலே போதும் முதலில் கொஞ்சம் சிரமாக தெரியும் ஆனால் கொஞ்ச நேரத்திலேயே உங்களுக்கு பழகிவிடும் “சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்” என்பதை போல எல்லாம் முயன்றால் எளிதாய் முடியும்.



நான் தங்களுக்காக எடுத்துக்கொண்ட எனது மகனின் கருப்பு வெள்ளை நிழல்படம் இப்போது கலர் வண்ணப்படமாக மாறியிருக்கிறது சிறு குறைகள் இருக்கலாம் உதாரணத்திற்காக என்பதில் நேரம் அதிகம் செலவலிக்காமல் வரைந்த்து மேலும் கொஞ்சம் மெனக்கெட்டால் இன்னும் அருமையாய் வந்திருக்கும் அதனால் என்ன உங்களுக்காக தானெ இது உங்களுக்கு புரிந்திருக்குமென்று நம்புகிறேன் இதை பற்றி ஏதேனும் சந்தேகம் வந்தால் கருத்துரையில் பதியவும் அல்லது மின்னஞ்சல் அனுப்பவும் அதற்கான வசதியும் நம் தளத்தில் இருக்கிறது.


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF