welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Friday, 23 December 2011

விண்டோஸ் இன்ஸ்டால்-1

*இனி உங்களிடம் அவசியம் விண்டோ சிடி இருக்கவேண்டும் உங்களிடம் ஒரிஜினல் பதிப்பாக இருந்தால் கீழ் உள்ள விபரங்கள் தங்களுக்கு அவசியப்படாது அல்லாது நீங்கள் காப்பி எடுப்பதாக இருந்தால் (இது சட்டப்படி தவறுதான்) நீரோவின் வழியாக சிடியிலிருந்து சிடி காப்பி எடுத்து எரிக்கும் வசதி இருக்கிறது அதையே பயன்படுத்துங்கள் அது எப்படியென படத்தை பாருங்கள் புரியும்.




படத்தில் உள்ளது போல காப்பி சிடி என்பதை தெரிவு செய்தால் போதும்.



நீங்கள் கொடுக்கும் சிடியின் இமேஜ் அல்லது ஐஎஸ்ஓ, டேட்டா பைல்கள் எதுவாக இருந்தாலும் காப்பி ஆகும், காப்பி ஆனதும் தானகவே டிரைவ் திறந்து புது சிடியை இடச்சொல்லி கேட்க்கும் நீங்கள் இட்டுக்கொடுத்தால் போதும் எழுதி முடித்ததும் சிடி வெளியே வந்துவிடும் அவ்வளவுதான் இப்போது விண்டோஸ் இயங்குதளம் நிறுவ சிடி தயார்.

இதில் நீங்கள் ஒரு விஷயத்தை கவணிக்க வேண்டும் காப்பி எடுக்கும் போது ஏதாவது எர்ரர் வருகிறதா என கவணிக்க வேண்டும் ஒருவேளை அப்படி ஏதாவது எர்ரர் வந்தால் அந்த சிடியை நீங்கள் எரித்தாலும் பூட் ஆவதிலோ அல்லது இயங்குதளத்திலோ பிரச்சினை வரும் சாதரணமாக சிடி கிராக் இருந்தால் Unrecoverable error என்பதாக வரும் இருந்தாலும் காப்பி ஆகி கொண்டே இருக்கும் ஆனால் பலனில்லை.

ஒருவேளை நீங்கள் ரோரண்டில் தரவிறக்கியிருந்தால் நீங்கள் காப்பி எடுக்கும் போது நீரோவில் பூட் சிடியாக எரித்துவிடுங்கள் ரோரண்டில் தரவிறக்குவதாக இருந்தால் அதில் உள்ள கமெண்ட்ஸ் படித்து பாருங்கள் அதன் பின் தரவிறக்குங்கள் முடிந்தவரை விண்டோஸ் ஒரிஜினல் பதிப்பை பய்னபடுத்துங்கள் நீங்கள் ஒரிஜினல் பதிப்பை பயன்படுத்தினால் பிழை இருந்தாலும் அதை மைக்ரோசாப்ட் நிறுவனத்தினர் அதற்கென அப்டேட் பைல் கொடுப்பார்கள் காப்பியாக இருந்தாலும் அதற்கும் அப்டேட் கிடைக்கும் வசதி இனையத்தில் இருக்கிறது.




**இப்பொழுது உங்களிடம் விண்டோஸ் இயங்குதளம் நிறுவுவதற்கான குறுந்தகடு இருக்கிறது ஆனால் இப்போதும் நீங்கள் உடனேயே சிடி டிரைவில் இட்டு இயங்குதளம் நிறுவ தொடங்கி விட கூடாது அதற்கு முன்னதாக செய்ய வேண்டிய சில விஷயங்களையும் சொல்லிவிடுகிறேன். உங்களிடம் அவசியம் மதர்போர்டின் டிரைவர்ஸ் இருக்கவேண்டும் சாதரணமாக நீங்கள் புதிய கணினியாக வாங்கியிருந்தால் உங்களுக்கு டிரைவர்ஸ் அடங்கிய குறுந்தகடு கிடைத்திருக்கும் ஒரு வேளை நீங்கள் பழைய கணினியை வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் சில வேளை உங்களிடம் டிரைவர்ஸ் அடங்கிய குறுந்தகடு இருக்க வாய்ப்பில்லை எனவே அவசியம் உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு வெற்றிடத்தில் கிளிக்கி திற்க்கும் பாப் அப்பில் செட்டிங்ஸ் திறந்து அதில் உங்கள் கிராப்பிக்கல் டிரைவர் பெயரை குறித்துக்கொண்டு இனையத்தில் தேடி தரவிறக்கி வைத்துக்கொள்ளவும்.



அடுத்த்தாக Administrative Tools ->>Computer Management ->>System Tools ->>Device Manager திறந்து சவுண்ட் டிரைவர் என்ன என்பதை பார்த்த்துக்கொள்ளுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள் விண்டோஸ் இயங்குதளம் நிறுவாத பட்சத்தில் தேவையானால் டிரைவர்களை அப்டேட் இதன் வழியாகவே செய்யமுடியும். இதை வைத்து டிரைவர் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் ஒரு வேளை கிடைக்கவில்லையென்றாலும் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் சில நேரங்களில் மதர்போர்டோடு சவுண்ட் கார்டு இனைக்கப்பட்டிருக்குமானால் டிரைவர் தேடவேண்டிய அவசியம் இருக்காது ஆனால் அவசியம் கிராப்பிக்கல் டிஸ்பிளே டிரைவர் வேண்டும்.



அல்லது Start->> Settings->>Control Panel->>Sounds and Audio Devices திறந்து இதன் வழியாகவும் ஆடியோ டிரைவரை கண்டுபிடிக்க முடியும்.



இதெயெல்லாம் கண்டுபிடிப்பதற்கு வேறு ஒரு வழியும் இருக்கிறது Start->>Run->>type dxdiag என டைப் செய்து (type என்பதை எழுதவேண்டியதில்லை) திறக்கும் பாப் அப் விண்டோவில் மொத்த தகவலும் அடங்கியிருக்கும் படத்தை பாருங்கள் எளிதாக புரியும்.



என்ன நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக டிரைவர்ஸ் பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் இனி உங்களிடம் இனையம் இல்லை, இருந்தால் உங்களால் டிரைவர்ஸ் தேடி கண்டுபிடிக்க பெரிய கடினம் இருக்காது ஆனால் இனையம் இல்லாதவர்களுக்கு உங்கள் கணினியில் இருக்கும் டிரைவர்ஸை பேக்கப் எடுக்கும் வசதி பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் இது உங்கள் கணினியில் வைரஸ் இல்லை என்கிற நம்பிக்கை இருந்தால் மட்டுமே உதவும் ஒரு வேளை வைரஸ் பிரச்சினையால் தான் இயங்குதளம் மாற்றி நிறுவப்போகிறீர்கள் என்றால் அவசியம் நீங்கள் டிரைவர்ஸ் தேடி தரவிறக்க வேண்டியிருக்கும்.
***சில நேரங்களில் ஏதாவது பிரச்சினையால் மேற்சொன்ன விஷயங்களை காணமுடியாத போதுசிபியூ மானிட்டர் தரவிறக்கி உங்கள் கணினியில் வழக்கம் போல இன்ஸ்டால் செய்துவிடுங்கள், எல்லாம் முடிந்ததும் இந்த மென்பொருளை இயக்கினால் உங்க்ள் கணினியின் மதர்போர்டு விபரத்தை சொல்லிவிடும் பெரும்பாலு இதன் அவசியம் வராது அப்படி வந்துவிட்டால் ஒரு தீர்வுக்காக தான் இந்த விளக்கமும் இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் அதில் மொத்த விபரமும் இருக்கும்.



சரி நண்பா கணினியே இயங்கவில்லை ஆனால் இயங்குதளத்திற்கு தேவையான டிரைவர்ஸ் அவசியம் அதற்கு முன் எப்படி தெரிந்துகொள்வது என கேட்பவர்கள் உங்கள் சிபியூ-வின் உறையை கழட்டி பாருங்கள் உள்ளே மதர்போர்டின் ஏதாவது ஒரு பாகத்தில் நிச்சியம் அதன் விபரம் கொடுக்கப்பட்டிருக்கும்.



இப்போது உங்களிடம் இயங்குதளம் நிறுவ தேவையான விண்டோஸ் சிடி, அதற்கான டிரைவர்ஸ் எல்லாம் தயராய் இருக்கிறது இனி உங்கள் கணினியில் எந்தவிதமான முக்கியமான கோப்புகளும் இல்லையென்றால் நேரடியாக பார்மட் அல்லது இன்ஸ்டாலேசன் தொடங்கிவிடலாம். அதுவல்லாமல் கணினியில் முக்கிய கோப்புகள் இருக்குமேயானால் முதலில் அதை எல்லாம் பேக்கப் எடுத்துக்கொள்ளுங்கள், கணினி இயங்காத பட்சத்தில் உங்கள் ஹார்ட்டிரைவை வேறொரு கணினியில் இனைத்து பேக்கப் எடுத்துக்கொள்ளவும், சரி கணினி இயக்க நிலையில் இல்லை அதே நேரத்தில் வேறொரு கணினியும் இல்லை இந்த நேரத்தில் எப்படி கோப்புகளை காப்பி எடுப்பது இதற்கு உங்களுக்கு ஹைரன் உதவும் இனி பேக்கப் எடுத்த கோப்புகளை ஒன்றிரண்டு முறை வைரஸ் சோதனை செய்துவிடவும் சரியான முறையில் சோதனை செய்யாவிட்டால் மீண்டும் உங்கள் கணினியில் வைரஸ் அதன் கைவரிசையை ஆரம்பித்துவிடும் இனி என்ன உங்கள் விருப்பம் போல பார்மட் அல்லது விண்டோஸ் இன்ஸ்டாலேசன் தொடங்கிவிடலாம் அதற்கு முன்னதாக பயாஸ் செட்டிங்குகள் மற்றும் பூட்டிங் தொடக்கம் இவற்றையும் சிறிதாக பார்த்துவிடலாம்?
****இனி உங்கள் கணினி வைரஸ் பிரச்சினை இல்லாமல் கணினி இயங்கும் நிலையில் இருந்தால் மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கணினியில் இருக்கும் டிரைவர்ஸ் பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளலாம் பின்னாளில் உதவியாய் இருக்கும் இதனுள்ளே இரண்டு டிரைவர் பேக்கப் (Driver Backup) மென்பொருள்கள் இனைத்துள்ளேன் தேவைப்படுபவர்கள் தரவிறக்கி பயன்படுத்தவும்.

சரி நண்பர்களே இப்போது உங்களிடம் விண்டோஸ் பதிவதற்கான குறுந்தகடு மற்றும் தேவையான டிரைவர்ஸ் எல்லாமே உங்கள் கைவசம் இருக்கிறது இனி உங்கள் விண்டோஸ் சிடியின் சீரியல் எண்ணை குறித்து வைத்துக்கொண்டு விண்டோஸ் குறுந்தகடை கணினியின் குறுந்தகடு தட்டில் இட்டு ரீஸ்டார்ட் Restart செய்யுங்கள் இனி தானகவே சிடி பூட் ஆக தொடங்கி சிறிது நேரத்தில் Press any key to boot from Cd…_ என வந்துவிடும் கீழ்ருக்கும் படத்தை பாருங்கள் இது வந்து விட்டால் நீங்கள் வேறு பயாஸ் செட்டிங்குகள் எதுவும் செய்யவேண்டி இருக்காது சில நேரங்களில் பூட்டபிள் சிடியாக இருந்தாலும் பூட் ஆவதில்லை அந்த நேரத்தில் என்ன செய்வதென்று கீழே பார்க்கலாம்.



சரி மேலே சொன்ன மாதிரி பூட்டபிள் சிடியாக இருந்தும் தானகவே பூட் ஆகவில்லை இனி அதற்காக நீங்கள் பதற தேவையில்லை உங்கள் கணினி பழைய கணினியாக இருந்தால் அதாவது குறைந்த்து ஆறேழு வருடங்களுக்கு முந்தயதாக இருப்பின் கணினியை ஸ்டார்ட் (Start) செய்து நான் கீழே கொடுத்திருக்கும் கீகளை விட்டு விட்டு அழுத்துங்கள் உங்களுக்கு பயாஸ் செட்டிங் வந்துவிடும் இதற்கு படங்கள் இல்லாத்தால் இனைக்க முடியவில்லை இருப்பினும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். 

1. CTRL + ALT + ESC
2. CTRL + ALT + INSERT
3. CTRL + ALT + ENTER
4. CTRL + ALT + S
5. PAGE UP KEY
6. PAGE DOWN KEY

உங்கள் கணினி கொஞ்ச நாட்கள் பழக்கமுள்ளதுதான் என்றால் பின்வரும் கீகளை அழுத்துங்கள் இப்போதுள்ள உள்ள கணினி என்றால் பெரும்பாலும் F2 என்பதாக இருக்கும் இருப்பினும் கீழுள்ள ஏதாவது ஒரு கீ உங்களை பயாஸ் செட்டிங்குக்குள் அழைத்துச்செல்லும்.

1. F2
2. DEL
3. ESC
4. F10

இல்லை நீங்கள் மேலே கொடுத்துள்ள கீகளை நான் முயற்சித்தும் பலனில்லை என்பவர்கள் நீங்கள் ஊகிக்கும் கீயை வேறு சில கீகளோடு அழுத்தி பிடித்துக்கொள்ளுங்கள் ஒரு வேளை தானகவே எர்ரர் ஆகி பயாஸ் செட்டப் செல்ல வாய்ப்பு இருக்கிறது அல்லது இனையத்தில் தேடிப்பாருங்கள் அல்லது உங்கள் நண்பர்களிடம் கேட்டு பாருங்கள். அநேகமாக மேலுள்ள கீகளில் ஏதாவது ஒன்று பொருந்தி விடும்.

மேலும் உங்கள் கவணத்திற்கு படம் உதவி www.whitecanyon.com 



இனி விளக்கபட்த்துடன் பயாஸ் செட்டிங்கில் சிடியிலிருந்து பூட் ஆவதற்கான செட்டிங்கு அமைப்பதை பார்க்கலாம் படங்கள் உதவி pcsupport.about.com 

இனி இப்படி வரும் விண்டோவில் பாருங்கள் கீழே DEL என இருக்கிறது இந்த கணினிக்கு பயாஸ் செட்டிங்கிற்குள் நுழைய DEL கீயை அழுத்தினால் போதும் பயாஸ் செட்டிங்கிற்குள் நுழைந்துவிடலாம்.



இனி இதே போலவே பயாஸ் செட்டிங்குகள் எல்லா கணினியிலும் இருக்க வேண்டுமென்பதில்லை சில சில சிறிய மாறுதல்கள் இருக்கும் இருந்தாலும் கொஞ்சம் ஆங்கிலம் வாசிக்க தெரிந்தால் போதும் பொறுமையால் படித்தால் கண்டுபிடித்துவிடுவீர்கள்.

இந்த படம் பயாஸ் செட்டிங்க்ஸ் மெயின் ஏரியா இதில் நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். ஒரு மெனுவில் இருந்து வேறொரு மெனுவிற்கு செல்ல ஆரோ கீயை பயன்படுத்துங்கள்.



இனி கீழிறுக்கும் இந்த படத்தை பாருங்கள் அதில் பூட் எனும் தெரிவு இருக்கிறதல்லவா இந்த பகுதியில் தான் நீங்கள் இனி கணினி தொடங்கும் போது சிடியிலிருந்து தொடங்குவதற்கான அமைப்பை செய்யப்போகிறீர்கள்.



இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் நீங்கள் செய்யவேண்டியது CD-ROM என்பதை தெரிவு செய்து முதன்மை பூட் ஏரியாவாக மாற்றப்போகிறோம் அதை செலக்ட் செய்ய எண்டர் கீயை உபயோகியுங்கள்.



இனி நீங்க்ள் EXIT போய்த்தான் சேமித்து வெளியேற வேண்டுமென்பதில்லை மாறாக F10 என்பதை அழுத்தினால் போதும் நீங்கள் செய்ய மாற்றங்களை சேமித்து கணினி தொடங்கும் போது விண்டோஸ் சிடியிலிருந்தே பூட் ஆக தொடங்கி விடும் இது உங்களுக்கு தெரிந்துகொள்வதற்காக மட்டுமே.



இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் நீங்கள் சரியாக மாற்றிவிட்டீர்கள் என்றால் எந்த தயக்கமும் இல்லாமல் EXIT சென்று EXIT SAVING CHANGES என்பதை எண்டர் கொடுக்கவும்.



இப்போது உங்களுக்கு இப்படி ஒரு செய்தி வரும் அதில் ஆம் எனபதாக சம்மதம் சொல்ல எண்டர் கீயை தட்டவும் அவ்வளவு தான் இனி உங்கள் கணினி ஸ்டார்ட் (Start) ஆகும் போது இனி சிடி வழியாகவே பூட் ஆக தொடங்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அவசரப்படாமல் படித்து பார்த்து நிதானமாக செய்யவும். ஒரு வேளை நாம் எங்கேயே பிழை செய்துவிட்டோம் என நினைத்தால் EXIT DISCCARDING CHANGES என்பதை தெரிவு செய்து எண்டர் கொடுத்து வெளியே வந்து பின்னர் மீண்டும் முதலில் இருந்து தொடங்கவும்.



இப்போது நீங்கள் பயாஸ் செட்டிங்கில் கணினி இயங்க தொடங்கும் போது நீஙகள் சிடி டிரைவில் இட்டுள்ள விண்டோஸ் குறுந்தகடில் இருந்து தொடங்க வேண்டும் என்கிற கட்டளைய சரியாக செயல்படுத்தியிருந்தால் கீழிருக்கும் விண்டோ வந்திருக்கும் இந்த மாதிரி வந்தவுடன் ஏதாவது ஒரு கீயை அழுத்தி விண்டோஸ் இன்ஸ்டால் செய்வதற்கான முதல் கட்டத்துக்குள் நுழையவும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF