தமிழ் எப்பவுமே சினிமாவுக்கு முக்கியத்துவம்நம் தமிழை பொருத்தவரை இனையத்தில் காமமும், சினிமாவும், பொழுதுபோக்கும் மிக பிரதானமான இடத்தை பிடித்திருக்கிறது அதற்காக உடனே கேள்வி கேட்க வேண்டாம் தமிழில் பயனுள்ள தளங்கள் இருக்கின்றனவா? நிச்சியமாய் இருக்கிறது ஆனால் என்னால் வகைப்படுத்தி தர இயலாது பலரும் பலவிதமான தேடல்கள் சார்ந்து இயங்குகின்றனர்.
கொடுத்தே வந்திருக்கிறது சினிமா இல்லையென்றால் நம் மக்கள் உயிருடன் இருப்பார்களா என்று கூட நினைக்க தோன்றுகிறது நாமும் செய்தித்தாள்களில் பொதுவாக சினிமாவிற்கும், நடிகைகளின் கிசுகிசுவிற்கும் கொடுக்கும் முக்கியத்தும் நம் நாட்டின் பிராந்திய நலனோ எல்லோக்கோடு பிரச்சினைகளையோ அல்லது அண்டை நாட்டுடனா உறவின் பிரச்சினைகளை எல்லாம் படிப்பது இல்லை! நாம் பார்த்து என்ன ஆகிவிடப்போது என்பதான கேள்வி? அதனால் தான் என்னவோ தமிழக அரசியல் கூட சினிமாவை சார்ந்திருக்கிறது நாமும் அதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம், பார்த்துகொண்டிருக்கிறோம்.அடுத்ததாக அடல்ட் தளங்கள் முன்பெல்லாம் கூகுளில் தமிழ் என்று தொடங்கும் போது அதன் முடிவு எழுதுக்கள் வேறு விதமாக இருக்கும் இப்பொழுது அப்படியில்லை ஆனாலும் எண்ணிக்கை குறைவில்லை என்றே நினைக்கிறேன் இளம் சமுதாயம் கெட்டுபோவதற்கு இன்றையை நிலையில் அலைபேசியும், இனையமும் பெருமளவில் உதவி செய்கிறது.
குறிப்பாக நான் இந்த பதிவு எழுத தொடங்கிய நோக்கமே சமீபத்தில் மகேஷ் என்பவரின் மனைவி பேஸ்புக்கால் வந்த வினை என்பதாக ஒரு செய்தியை படித்த போது இந்த உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பது கேள்வியாய் இருக்கிறது. காதல் என்றால் என்ன? அர்த்தம் என்ன? இப்படி நிறைய கேள்விகளை நமக்குள் எழுவதை நம்மாள் தவிர்க்க முடியவில்லை ஒரு பெண்ணிற்கு பத்து காதலர்களுடன் உறவு என்பதை பார்க்கும் போது கலச்சாராமும் பாரம்பரியமும் நிறைந்த தமிழகத்தில் தான் வாழ்கிறோமா! என் சந்தேகம் வருகிறது .
பேஸ்புக் எனும் சமுதாய தளம் வந்த போது இந்தளவிற்கு இதன் வீரியம் இருக்குமென்று நினைக்கவில்லை மேலும் பொதுவாகவே நான் சமுதாய தளங்கள் பொழுதுபோக்கு தளங்கள் அதிகம் விரும்புவதில்லை. பேஸ்புக் தளம் வழியாக பல குடும்ப பிரச்சினைகளையும் , கள்ளக்காதலையும், அன்றாடம் செய்திகளில் பார்க்க முடிகிறது. நான் எப்பவும் சிந்திக்கும் விஷயம் இது தான் முகம் அறியாத நண்பர்களோடு எப்படி இவர்கள் தொடர்புகொண்டு வீழ்த்துகிறார்கள் தங்களை பற்றிய தகவல்களை பொதுவெளியில் வெளியிடுகிறார்கள், தங்களின் நிழற்படங்களையும் வெளியிடுகிறார்கள் ஆனால் அந்த நிழல்படத்தை யாரும் எளிதாக பயன்படுத்த முடியும் என்பதோ அல்லது அந்த புகைப்படத்தின் வழியாக ஒருவரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் வரை நிகழக்கூடும் என்பதை கூட யோசிக்க மாட்டார்களா? ஆனால் இதில் ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் சிலர் தெரிந்தே தங்களின் புகைப்படத்தை பொதுவெளியில் வெளியிடுகிறார்கள் ஆனால் பாவம் எத்தைனையோ நபர்களுக்கு தெரியாது அவர்களின் புகைப்படங்களும் இருக்குமென்பது சில விஷயங்களை குறிப்பிட்டு எழுதமுடியவில்லை ஆனால் கூகுலிடம் கொஞ்சம் சூசகமாக தேடினால் எல்லாம் தெரிந்துவிடும்.
இதை படிக்கும் சிலராவது பேஸ்புக் உபயோகிப்பதை விருப்பமாக கொண்டிருக்கலாம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் உங்கள் நண்பர்கள் கூட்டத்தில் உங்களுக்கு எத்தனை நண்பர்களை தெரியும், சரி பரவாயில்லை ஒரு பொழுதுபோக்கிற்காக பேஸ்புக் பயன்படுத்துகிறீர்கள் தாரளமாக பயன்படுத்துங்கள் ஆனால் அது உங்களை பாதிக்காதிருக்கட்டும். இனையம் என்பது பொதுவெளியாய் இருந்து போய் கொலைக்களமாக மாறிக்கொண்டு வருகிறது..
நன்றி..GSR.. http://gsr-gentle.blogspot.com/
|
No comments:
Post a Comment