welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Friday 23 December 2011

விண்டோஸ் இன்ஸ்டால்-4

 இப்போது உங்கள் கணினியில் விண்டோஸின் சீரியல் எண்ணை கேட்டு ( விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4 ல் உங்கள் விண்டோஸின் சீரியல் எண்ணை குறித்து வைக்க சொல்லியிருந்தேன் ஞாபகமிருக்கிறதா) கீழிருக்கும் படம் போல வந்திருக்கும் அதில் பிழையில்லாமல் கொடுத்து விட்டு நெக்ஸ்ட் கொடுங்கள்.படங்கள் உதவி www.petri.co.il 



இப்போது கீழிருக்கும் படத்தை
பாருங்கள் இது போல ஒரு விண்டோ வரும் இனி இதில் Computer Name என்பதில் ஏதாவது உங்களுக்கு பிடித்த பெயரை கொடுங்கள் கீழே இருக்கும் பாஸ்வேர்ட் கட்டத்தில் வேண்டுமானல் கடவுச்சொல் கொடுங்கள் அவசியம் இல்லையென்றால் விட்டு விடுங்கள் தேவைப்பட்டால் பின்னாளில் பார்த்துக்கொள்ளலாம். 



இனி இப்படியாக ஒரு விண்டோ வந்திருக்கும் இதில் இரண்டு விதமான செட்டிங்ஸ் இருக்கிறது இதில் நீங்கள் Typical Settings என்பதையே தேர்ந்தெடுங்கள் எல்லாவற்றையும் தானக செய்துவிடும்.



ஒரு வேளை Custom Settings என்பதை தேர்ந்தெடுத்தால் (என்னுடைய அறிவுறுத்தல் Typical Settings) தேர்ந்தெடுத்தால் கீழிருக்கும் படம் போல வரும் இது சாதரணமாக நெட்ஒர்க் கணினிகளுக்கு குறிப்பிட்ட ஐபி வழங்குவதற்காக பயன்படுத்துவார்கள், இதில் Internet Protocol (TCP/IP) என்பதை தெரிவு செய்து அதன் கீழிருக்கும் Properties என்பதை கிளிக்கி சில செட்டிங்ஸ் செய்யவேண்டி வரும் சாதரண கணினி பயன்பட்டாளருக்கு இதன் அவசியம் வராது எனவே இதை பற்றி நான் எழுதபோவதில்லை உங்கள் பார்வைக்கு மட்டுமே படம் இனைத்திருக்கிறேன்



இனி கீழிருக்கும் படம் போல திறக்கும் இதில் உங்கள் கணினிக்கு ஏதாவது ஒரு பெயர் கொடுங்கள் ஒரு வேளை உங்கள் கண்னி வேறு ஏதாவது ஒரு நெட்ஒர்க்கில் இனைக்கப்பட்டிருந்தால் ஏற்கனவே எந்த பெயரில் இயங்கியது என்பதை அறிந்து அதே பெயரை கொடுத்து ஒரு நெக்ஸ் கொடுத்துவிடுங்கள்.



இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் சிறிது நேரத்தில் உங்கள் புதிய விண்டோஸ் முழுமையாக நிறுவிக் கொண்டிருக்கும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டி வரும்.



அன்பின் நண்பர்களே ஒரு வழியாய் இந்த பதிவையும் விண்டோஸ் நிறுவலையும் முடிக்கும் நிலையில் இருக்கிறோம் இனி அடுத்த பதிவில் இதன் இறுதி கட்டத்தையும் பார்த்துவிடலாம் இந்த பதிவு முழுக்க முழுக்க தனி நபர் பயன்பாட்டை வைத்தே எழுதப்பட்டிருக்கிறது எனவே சில இடங்களில் தேவையில்லாத விஷங்களை தவிர்த்திருக்கிறேன்.
எல்லாமே சரியாய் செய்திருந்தால் இப்போது கீழிருக்கும் படம் போல வந்திருக்கும் அதை ஓக்கே கொடுத்து விடுங்கள். படங்கள் உதவி www.petri.co.il 



இனி இப்படியாக ஒரு விண்டோ வரும் இந்த விண்டோவில் வருவது போல 18 செகண்டுகள் காத்திருக்கலாம் அல்லது காத்திருக்காமல் ஓக்கே கொடுத்து விடலாம்.



இனி உங்கள் விண்டோ தொடங்குவதற்கான ஸ்கீரின் வரும் சிறிது நேரம் காத்திருக்க சொல்லும் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும்.



இனி கீழிருக்கும் படத்தில் உள்ளது போல சில பல விண்டோ வரும் எல்லாம் புரிந்துகொள்ளும் வகையில் தான் இருக்கும் எனவே அது பற்றி அதிகம் படங்கள் இனைக்கவில்லை எல்லாம் நெக்ஸ்ட் கொடுக்க வேண்டிவரும்.



இனி இப்படியாக ஒரு விண்டோ வரும் போது நீங்கள் இன்ஸ்டால் செய்த்து ஒரிஜினல் பதிப்பு என்றால் அவசியம் இனைய இனைப்பு கொடுத்து ரிஜிஸ்டர் செய்து விடுங்கள் ஒருவேளை கிராக் செய்யப்பட்டது என்றால் No not this time என்பதை செலக்ட் செய்து நெக்ஸ்ட் சென்று விடுங்கள்.



எல்லாம் முடிந்த்தும் மைக்ரோசாப்ட் நிறுவணத்தின் சார்பாக உங்களுக்கு நன்றி சொல்வார்கள் அதையும் ஏற்றுக்கொண்டு நீங்கள் கிராக் செய்த பதிப்பாக இருந்தாலும் அவர்கள் நாகரீகமாக நன்றி சொல்வதை மறக்கமாட்டார்கள், விண்டோவில் கீழே இருக்கும் பினிஷ் பொத்தானை அழுத்தினால் போதும் விண்டோஸ் இன்ஸ்டாலேசன் முழுவதுமாக முடிந்தது.



இனி இந்த விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 1ல் பார்த்த படி நீங்கள் முன்னரை தரவிறக்கி வைத்திருந்த டிரைவர் அல்லது உங்களிடம் இருக்கும் மதர்போர்டு குறுந்தகடு இட்டு கணினிக்கு தேவையான டிரைவர்களை இன்ஸ்டால் செய்யவும் அவ்வளவுதான் அடுத்தபடியாக உங்களுக்கு தேவையான மென்பொருள்களை கணினியில் நிறுவவும் மறக்கமால் அவசியம் நல்ல ஆன்டிவைரஸ் இன்ஸ்டால் செய்துவிடவும், அப்படியே இந்த பதிவை பாருங்கள் கீலாக்கர் அபாயமும் அதற்கான பாதுகாப்பும் பாருங்கள் உங்களுக்கு அவசியம் என நினைத்தால் அதையும் இன்ஸ்டால் செய்துவிடுங்கள்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF