welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Friday 23 December 2011

குழந்தை பிறந்த நேரத்தை வைத்து அவர்கள் நட்சத்திரம் மற்றும் ராசி கண்டு பிடிக்க..

வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் அவர்களின் ஜாதக பலன்கள் அறிவது பற்றி பார்க்கலாம்.



விஞ்ஞானம் மெய்ஞானம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் ஜோதிட்த்தின் மீதான நம்பிக்கை ஒரு பக்கம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது அதன் அடிப்படையில் தான் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்கள் பிறந்த நேரத்தை குறித்து வைத்து யாராவது ஒரு ஜோதிடரிம் கொடுத்து அவர்கள் வழியாக நட்சத்திரமும், ராசியும், , அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் ஜாதகமும் எழுதி வாங்குவது வழக்கம். ராசி நட்சத்திரம் சரியாக தெரிந்துகொள்ள முடிகிறது அதே நேரத்தில் ஜாதகம் கணிக்கும் மென்பொருள்கள் அவ்வளவு சிறப்பானதாக தெரியவில்லை இருப்பினும் அதற்கான தரவிறக்கமும் தருகிறேன்.

இனி முதலில் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து அவர்கள் நட்சத்திரம் மற்றும் ராசி கண்டு பிடிக்க.

குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி

முதலாவதாக Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்) தளம் சென்று பிறந்த இடம், பிறந்த தேதி, பிறந்த நேரம் கொடுக்கவும் நீங்கள் இந்தியாவில் இருந்தால் Time Zone மாற்ற வேண்டியதில்லை வெளி நாடுகளில் பிறந்த குழந்தையாய் இருக்கும்பட்சத்தில் அதற்கான Time Zone மாற்றவேண்டியது அவசியமாகும் இந்த தளம் உபயோகிப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறது. 1901 ம் ஆண்டு முதல் 2100 ம் ஆண்டு வரையிலான நட்சத்திரம் மற்றும் ராசி இரண்டையும் எளிதாக அறிய முடியும்.

இரண்டாவதாக இவர்களும் Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்) சரியான பதிலை தருகிறார்கள் ஆனால் கொஞ்சம் நம்மை அதிகம் கேள்வி கேட்டு குழப்புவார்கள் உதாரணத்துக்கு Latitude, Longitude இவையிரண்டும் ஜோதிட்த்தில் அவசியமே ஆனால் நமக்கு சரியான இடத்திற்கான Latitude, Longitude எல்லோருக்கும் தெரிவதில்லை ஆனால் அதை எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலான மென்பொருள் ஜாதகம் கணிக்கும் மென்பொருளின் உள்ளே அந்த வசதியும் இருக்கிறது அதை வைத்து இங்கு தேவையான Latitude, Longitude இரண்டையும் நிரப்ப முடியும். இவர்களின் முடிவும் சரியாகவும் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கிறது.

இப்பொழுது உங்களால் மிக எளிதாக பிறந்த குழந்தையின் நேரத்தை வைத்து ராசி மற்றும் நட்சத்திரம் தெரிந்துகொண்டிருப்பீர்கள் மேலும் நட்சத்திர, மற்றும் ராசி பலன்கள் தெரிந்து கொள்ள.

நட்சத்திரம் மற்றும் ராசியின் பொதுவான பலன்கள் 

பொதுவான நட்சத்திர பலன் தெரிந்து கொள்ள tamilkalanjiyam astrology.himadurai 

பொதுவான ராசி பலன் தெரிந்து கொள்ள astrology.dinakaran 

இனி நட்சதிரத்துகான பெயர் அடிப்படையில் பெயர் வைப்பதற்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்து தொடக்க எழுத்தாக அமையவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள. 

பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து

நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து தெரிந்து கொள்ள baby names based on birthstarஎழுத்துக்கள் தமிங்கிழிஷ் அடிப்படையை கொண்டது உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்துக்கு Cho, Che, Chu, La இதை சு,சே,சோ,ல என்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும், தெவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து

பிறந்த குழந்தைக்கான நட்சத்திரம் ராசி தெரிந்து கொண்டாகி விட்டது அதனிடையே பொதுவான நட்சத்திர, ராசி பலனகளும் தெரிந்துகொண்டோம் இனி குழந்தைகளுக்கான பெயர் எந்த தளங்களில் தேடலாம் என்பதற்காக சில தளங்களை வரிசை படுத்தப்பட்டிருக்கிறது.

குழந்தைகளுக்கான பெயர்கள் தேட

web.archive.org 

thamizhagam.net 

shaivam.org 

pudhucherry.com 

anbutamil.com 

babynames.looktamil.com 

indiaparenting.com 

hinduchildnames.com 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF