welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Friday 23 December 2011

விண்டோஸ் இன்ஸ்டால்-3

*****கணினியில் இனைய இனைப்பு இனைக்கப்பட்டிருந்தால் அவசியம் நீக்கிவிடவும் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம் இப்போது நீங்கள் Press any key to boot from Cd…_ என்பதாக வரும் விண்டோவில் ஏதாவது ஒரு கீயை அழுத்தியவுடன் பின்வரும் விண்டோ வரும் இதில் நீங்கள் ஒன்றுமே செய்யவேண்டியதில்லை. படங்கள் உதவி www.petri.co.il 





இனி கீழிருக்கும் படத்தை போல இரு முறை வரும் ஆனால் ஒன்றை மட்டுமே இனைத்திருக்கிறேன் இதையெல்லாம் பெரிதாக கவணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை மேலும் இந்த விண்டோவில் மூன்றாம் நபர் மென்பொருள்கள் நிறுவ விரும்பினால் F6 அழுத்த சொல்லும் நீங்கள் அதெயெல்லாம் ஒன்றும் செய்யவேண்டாம் விண்டோவை நிறுவியதும் பின்னர் நிறுவிக்கொள்ளலாம்.



இனி கீழிருக்கும் விண்டோ வரும் இதில் கவணிக்க வேண்டியது நீங்கள் புதிதாக விண்டோ நிறுவ விரும்பினால் இந்த திரை வந்ததும் ஒரு எண்டர் அடிக்கவும் இல்லை கணினியின் இயங்குதளத்த ரிப்பேர் செய்ய நினைத்தால் R என அழுத்தவும் எல்லாமே எழுதி காண்பிக்கும் அதனால் ஒன்றுக்கும் கவலைபட வேண்டியதில்லை ஆனால் புதியதாக நிறுவதுதான் நல்லது ஒருவேளை விண்டோஸ் நிறுவுவதில் இருந்து வெளியேற நினைத்தால் F3 அழுத்தி இன்ஸ்டாலை விட்டு வெளியே வந்துவிடலாம் ஆனால் நம் தேவை இயங்குதளம் நிறுவுவது தானே எனவே ஒரு எண்டர் கொடுத்து உள்ளே செல்லுங்கள்.



இனி விண்டோஸ் உரிமையாளர்கள் நம்மிடம் அக்ரிமெண்ட் கேட்பார்கள் சாதரணமாக எந்த மென்பொருள் நிறுவினாலும் இது போல வரும் இதை மொத்தமாக படித்து பார்த்து ஓக்கே என்பதற்கு F8 கீயை அழுத்தவும் பொதுவாக யாரும் படித்து பார்ப்பதில்லை என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் எனவே நீங்கள் படித்து பார்த்தாலும் படித்து பார்க்கவிட்டாலும் இதிலிருந்து அடுத்த கட்டம் செல்ல அவசியம் F8 கீயை அழுத்தவேண்டும்.



இனி கீழிருக்கும் படத்தை பாருங்கள் Un partitioned Space என்பதாக இருக்கிறது பாருங்கள் இது புதிய கணினிக்கு மட்டுமே பொருந்தும் நம்முடைய கணினி நாம் ஏற்கனவே உபயோகித்து கொண்டிருப்பது என்றால் கணினியில் ஏற்கனவே எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்ததோ அத்தனை பகுதிகளையும் காண்பிக்கும். உங்கள் கணினியில் ஏற்கனவே மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு டிரைவின் பெயரோடு அதன் அளவையும் காண்பிக்கும் , இதில் ஒரு டிரைவை அழிப்பதற்கு D புதிதாக ஒரு டிரைவை உருவாக்குவதற்கு C என்கிற கீயை பயன்படுத்தவேண்டும், இப்போது உங்கள் கணினியில் C டிரைவ் 80000எம்பி, D டிரைவ் 80000எம்பி என இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள் (அளவுகள் எம்பியில் தான் கொடுக்கவேண்டும்) இப்போது இரண்டு டிரைவ்களாக இருப்பதை மூன்றாக அல்லது நான்காக எப்படி வேண்டுமானாலும் பிரித்து வைக்க நினைக்கிறீர்கள், நீங்கள் செய்யவேண்டியது முதலில் C டிரைவ் செலக்ட் செய்து D (D என்பது DELETE) என்பதை அழுத்தவும் இப்போது C டிரைவ் காணாமல் போயிருக்கும் அதே நேரத்தில் Un partitioned Space 80000 என வந்திருக்கும், அடுத்து D டிரைவ் செலக்ட் செய்து D (D என்பது DELETE) என்பதை அழுத்தவும் இப்போது ஏற்கனவே Un partitioned Space 80000 என இருந்தது D டிரைவும் மறைந்ததும் அதன் மொத்த அளவு 160000 எம்பி என மாறியிருக்கும்.

இனி மீண்டும் Un partitioned Space 160000 எம்பி என இருப்பதை உங்கள் விருப்பம் போல பிரித்துக்கொள்ள C (C என்பது CREATE) என்பதை அழுத்தவும் அருகில் அதற்கான அளவை கொடுக்கவும் அதாவது C டிரைவ் 40000எம்பி எனக் கொடுத்தால் Un partitioned Space 120000 எம்பி ஆகிவிடும் இவ்வாறாக நீங்கள் எத்தனை பார்ட்டிசியன் செய்ய விரும்புகிறீர்களோ அத்தனையும் செய்துகொள்ளுங்கள் இனி ஏதாவது ஒரு டிரைவை செலக்ட் செய்து ஒரு எண்டர் கொடுத்தல் போதும் நீங்கள் செலக்ட் செய்த டிரைவில் விண்டோஸ் நிறுவலாம்.



இனி கீழிருப்பது போல ஒரு விண்டொ வரும் அதில் நான்கு விதமான இன்ஸ்டால் செய்வதற்கான முறைகள் இருக்கும் அதில் நீங்கள் முதலாவதாக இருக்கும் Format the partition using NTFS file system என்பதயே தேர்ந்தெடுங்கள் அல்லது அதற்கு பதிலாக மூன்றாவதாக இருக்கும் Format the partition using NTFS file system என்பதையும் தேர்ந்தெடுக்கலாம் இரண்டுமே ஒன்றுதான்,ஒன்று வேகமாக நிறுவல், மற்றொன்று நார்மல் இன்ஸ்டாலேசன் என்பதாகும், மேலிருந்து கீழாக அல்லது கீழிருந்து மேலாக செல்ல ஆரோ கீயை பயன்படுத்தவும். இதில் ஏதாவது ஒன்றை தெரிவுசெய்து ஒரு எண்டர் கொடுத்தால் பழைய தகவல்களை அழித்துவிட்டு புதிதாக இயங்குதளம் நிறுவ தயாராகிவிடும்.



இனி கீழிருக்கும் இரண்டு படங்களையும் பாருங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இரு விண்டோக்களும் தோன்றும் முதல்படம் நாம் ஏற்கனவே பிரித்த பார்ட்டிசியன் டிரைவை சரிபார்த்து விண்டோஸ் சிடியின் இயங்குதள பைல்களை காப்பி செய்யத்தொடங்கும், இரண்டாவது படம் காப்பி ஆகி கொண்டிருப்பதை காண்பிப்பதாகும் இதையெல்லாம் நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம் முதல் படம் போல வந்ததும் தானகவே அடுத்த படத்தில் இருக்கும் விண்டோவிற்கு தானக சென்றுவிடும். அவசரமோ பதட்டமோ இல்லாமல் நிதானமாக செயல்படுங்கள். 





இனி மேலே சொன்ன பைல் காப்பி செட்டப் முடிந்ததும் கணினி ரீஸ்டார்ட் (Restart) ஆக தொடங்கும். கணினி ரீஸ்டார்ட் (Restart) ஆகும் போது நாம் ஏற்கனவே விண்டோஸ் இன்ஸ்டால் (இயங்குதளம் நிறுவல் Windows Installation)–பாகம் 4 ல் நாம் பூட் சீக்குவன்ஸ் மாற்றுவது பற்றி பார்த்தோம் அதில் பூட் சிடியிலிருந்து தொடங்க வேண்டும் என்பதாக கட்டளையை கொடுத்திருந்தோம் ஆனால் இப்போது கணினியின் இயக்கம் வண்தட்டில் இருந்து பூட் ஆகுமாறு மாற்றிக்கொடுக்கவும் இந்த இடத்தில் தவறு நேர்ந்தால் மீண்டும் தொடக்கத்தில் இருந்து செய்ய வேண்டிவரும் எனவே கவணமாக செய்துவிடுங்கள் அவ்வளவுதான் இனி எல்லாம் எளிமையாக இருக்கும்.

நான் மேலே குறிப்பிட்ட விஷயங்களை சரியாக செய்துவிட்டால் கீழிருக்கும் விண்டோ வரும் இதுவரை சரியாக செய்துவிட்டீர்களா? கர்வத்தோடு ஒரு சபாஷ் சொல்லிக்கொள்ளுங்கள் இனி வரும் விஷங்கள் எல்லாமே எளிமையாக இருக்கும் இப்போது இயங்குதள நிறுவலில் முக்கியமான கட்டத்தை கடந்துவிட்டீர்கள்.



இப்போது உங்கள் கணினியில் புதிய விண்டோஸ் இன்ஸ்டால் ஆவதை உணர்த்தும் வகையில் கீழிருக்கும் படம் போல விண்டோ வந்திருக்கும் இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவணியுங்கள் இனி நீங்கள் நிறுவும் விண்டோ ஒரிஜினல் பதிப்பு என்றால் மட்டுமே பின்வரும் செட்டிங்ஸ் வரும் ஒரு வேளை நீங்கள் உபயோகிக்கும் விண்டோ சிடி கிராக் செய்யப்பட்டது (குறிப்பாக US Patched கிராக் என்றால் சில நேரங்களில் Regional Settings எல்லாம் உங்களிடம் செய்ய சொல்வதில்லை நான் சோதித்து பார்த்த வரையில் சில கிராக் செய்யப்பட்ட விண்டோஸில் ரீஜினல் செட்டிங்ஸ் மற்றும் நெட்ஒர்க் செட்டிங்ஸ் சிலவற்றில் கேட்பதில்லை எல்லாவற்றையும் தானாகவே நிறுவிவிடும் மேலும் விண்டோஸின் சீரியல் எண்ணையும் தானகவே நிறுவி விடும்) என்றால் இதே போலவே வருமென்பதில்லை இருந்தாலும் இதற்காக கவலைபட வேண்டியது இல்லை ஒரு வேளை இதே போலவே வரவில்லையென்றாலும் கவலைப்படாமல் தைரியமாக முன் செல்லுங்கள் இனி ஒரு வேளை நீங்கள் தவறுதலான செட்டிங்ஸ் செய்து விட்டாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை பின்னால் சரி செய்துவிட முடியும்.படங்கள் உதவி www.petri.co.il 




இனி இப்படியாக ஒரு விண்டோ வரும் இதில் நீங்கள் சில மாற்றங்களை செய்யவேண்டிவரும் இதில் கஷ்டமைஸ் (Customize) ல் கிளிக்குங்கள்.



இப்போது உங்களுக்கு கீழிருக்கும் படம் போல மேலும் ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் அதில் Language டேப் திறந்து அதில் Supplemental Language support என்பதன் கீழாக இருக்கும் இரண்டு தேர்வுகளில் முதலாவதாக இருக்கும் Install files for computer script and right to left left language (including Thai) என்பதில் ஒரு டிக் மார்க் குறி ஏற்படுத்தவும் உடனேயே மேலும் ஒரு சிறிய பாப் அப் விண்டோ தோன்றும் அதில் ஓக்கே கொடுத்து விடுங்கள் சந்தேகத்திற்கு படத்தையும் பாருங்கள் இது செய்யவில்லையென்றாலும் பிரச்சினை இல்லை இப்படி செய்தால் தமிழ் யூனிகோட் படிக்க சிரமம் இருக்காது ஒர்வேளை செய்ய விட்டுப்போனால் பின்னாளில் NHM Writer இன்ஸ்டால் செய்யும் போது சரியாகிவிடும். 



மேலே சொன்ன சிறிய பாப் அப் விண்டோவை ஓக்கே கொடுத்த்தும் இனி கீழே உள்ள படத்தில் இருப்பது போல Apply கொடுக்கவும்.



இப்போது கீழிருக்கும் படத்தில் காண்பிப்பது போல ஒரு சிறிய பாப் அப்பில் உங்கள் மொழிகளை இன்ஸ்டால் செய்வதாக சொல்லும் முடிந்தவுடன் ஓக்கே கொடுத்து விடுங்கள்.



இனி இப்படியாக ஒரு விண்டோ வந்து உங்களின் பெயரையும் உங்களின் நிறுவனப்பெயரையும் கேட்கும் நீங்கள் விரும்புகிற ஏதாவது ஒரு பெயரை கொடுத்துவிடுங்கள்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF