welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Friday 23 December 2011

(அறிவியல் உண்மை)வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்தால் ...

வணக்கம் நண்பர்களே இந்த பதிவை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் எத்தனையோ நண்பர்கள், பெரியோர்கள் இதனை பற்றி தெரியாமல் இருக்க கூடும் ஆனால் நம் வீட்டு பெரியோர்கள் சொல்வார்கள் டேய் வடக்கு பக்கம் தலை வைக்காதடா.. ஏன் என கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியாது ஆனால் அவர்கள் சொல்வதில் விஞ்ஞானம் இருக்கிறது அந்த விஞ்ஞான அறிவியல் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நமக்கு எல்லோருக்கும் தெரியும்
நம் பூமியே சுற்றிலும் ஒரு காந்த படுகை இருக்கிறது நமது கிரகங்களும் (Planet) காந்த முனைவுகளை கொண்டுள்ளது நம் கிரகங்கள் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதியை நோக்கி காந்த துருவம் அமைந்திருக்கிறது இதை சாதரணமாக நம்மிடம் இருக்கும் திசை காட்டும் கருவியில் (Compass) பார்த்தாலே தெரியும். திசை காட்டும் கருவியின் மேல்முனை எப்போதும் வடக்கு நோக்கி இருக்கும் எதிர் முனை தெற்கு பகுதியை நோக்கியே இருக்கும் இந்த காந்த சக்தியை முன்பே விஞ்ஞானம் வளராத காலத்திலேயே நம் முன்னொர்கள் வடக்கு பக்கம் தலை வைக்காதே என்று சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் தெற்கு கிழக்கு பகுதிகளில் சரி சமமான ஈர்ப்பு சக்தி இருக்கிறது அதனால் நாம் தூங்கி எழும் போது சுறுசுறுப்பாகவும் மனது ரிலாக்ஸாகவும் உடல் நலக்குறைவு இல்லாமால் எழுந்திருக்க முடியும்.

நமது கிரகங்கள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றி வருகிறது மேலும் சூரியனின் காந்த துருவம் கிழக்கில் இருந்து பூமிக்குள் வருகிறது இதன் அழுத்தம் நம் தலை வழியாக வெளியேற பார்க்கும் போது அதிகபடியான வெப்பம் எதிர் நோக்கி எழும்பும் போது நம் தலையில் ஒரு வித ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு நோய்வாய் ஏற்படும் நிலையும் வருகிறது. இதன் அடிப்படையிலேயே தான் வீட்டின் முகப்பு கூட வைக்கப்படுகிறது இது நம் இந்தியாவில் இதை கடைபிடிக்கிறார்கள் வேறு இடங்களில் குறைவாகவே இருக்கிறது.

மேலும் இது பற்றிய ஆராய்ச்சியில் வடக்கு மற்றும் மேற்கு பக்கம் தலை வைத்து படுப்பதால் நோய்கள் அதிகமாகவும் உடம்பில் சோர்வுத்தன்மையும் மூளையை மந்த புத்தி ஆக்குவதாகவும் சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் இரவு உணவு எப்போதும் கஞ்சனை போல சாப்பிட வேண்டும் அதாவது மதிய உணவு உண்பது போல உண்ணக்கூடாது உறங்கும் போது கிழக்கு பக்கம் தலை வைத்து மேற்கு பக்கம் கால் நீட்டவும் அல்லது தெற்கு பகுதியில் தலை வைத்து வடக்கு பக்கம் கால் நீட்டவும். இதற்கு எதிர்மறையான நிலையில் உறங்குபவர்கள் எப்பொழுதும் எரிச்சலும் சோம்பேறித்தனமும், தன்னம்பிக்கையும் இழந்து காணப்படுவார்களாம்.

சரி என்ன பெரிய தூக்கம் தூங்கின பின் நமக்கு என்ன தெரியபோகுது? எப்படி தூங்குனா தான் என்ன என கேள்வி கேட்பவர்களுக்கு உங்கள் இரவு தூக்கம் சரியில்லை என்றால் அன்றைய தினம் விடிந்ததும் உங்களால் அசூசையான நிலையை உணரமுடியும் பின்ன என்ன எடுத்ததுக்கெல்லாம் எரிச்சல் வரும் வீட்டில் சண்டை வரும் அதோடு அலுவகம் சென்றால் அங்கு சொல்லவே வேண்டாம் உங்கள் தூக்கம் தான் பிரச்சினைகளை விடுபட வைக்கும் சரியான தூக்கமின்மையும் மேலும் சில வியாதிகளை பரிசாக தரும் சரியான நேரத்தில் தூங்கி எழுபவரின் மூளைக்கும் மன உளைசல் அல்லது இன்ன பிற காரணங்களால் தூங்காதவர்களின் மூளையும் EGG (ELECTRICAL ACTIVITY IN THE BRAIN) என்கிற பரிசோதனையில் அதிகம் வித்யாசம் வருவதாக சொல்கிறார்கள்.

நாம் சரியாக தூங்காத போது நம் உடலின் தசைகளும் ரிலாக்ஸாக ஆவதில்லையாம் மாறாக முறுக்கு கூடி அதனாலே முதுகு வலி, கை கால் வலி வரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவம் சொல்கிறது அதே போலவே தூங்குவதும் எழுந்திருப்பதும் ஒரு சரியான நேரத்தை வழமையாக்கி கொள்வது நல்லது அதனால் உடல் சரியான இயக்கதில் இருக்கவும் செய்யும்.

வடக்கு மேற்கு பக்கம் தலை வைத்து படுத்தால் மந்த புத்தி சுகவீணம், தன்னம்பிக்கை குறைவு வரும்.

தெற்கு கிழக்கு தலை வைத்து படுப்பதால் காந்த சக்தியால் நமக்கு இழப்பு ஏற்படுவதில்லை தேவையில்லாதா அசூசகமான நிலை வருவதில்லை. 


ஓவ்வொரு நபருக்கும் தூக்கத்திற்கான அளவுகள் இருக்கிறது.

குழந்தைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்க வேண்டும் 

இளைஞர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேண்டும் 

வயது வந்தவர்கள் 7 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும்.

கர்ப்பமான பெண்கள் வழமையாக தூங்கும் நேரத்தை விட மேலும் சில மணி நேரங்கள் உறங்குவது நல்லது

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF