welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Saturday, 31 December 2011

கணினி வேகத்தை அதிகரிக்க வன்தட்டை சுத்தம் செய்வோம்.


வணக்கம் நண்பர்களே!!

கணினியில் நாம் பொருத்தி வைத்துள்ள வன் தட்டின் 

                                               பயன்படுத்தாத இடத்தின்(Free space) அளவில் எப்போதும் 
ஒரு கண் வைத்திருப்போம். அவ்வாறு இருப்பதற்கு முக்கிய 
காரணமும் இருக்கிறது. வன் தட்டின் பயன்படுத்தாத 
இடத்தின் அளவில் நம் கணினியின் வேகம் தங்கியுள்ளதே 
அதுவாகும்.எனவே வன்தட்டை தேவையற்ற விதத்தில் 
குப்பைகளை இட்டு நிரப்புவதை தவிர்ப்பதன் மூலம் இடத்தை 
சேமித்து கணினி வேகத்தை குறைய விடாமல் பேணலாம்.சரி,
ஏற்கனவே வன்தட்டில் உள்ள அதிக இடத்தை பிடிக்கும் 
பைல்களையும் நகல் பைல்களையும் (Duplicate file) கண்டறிவது 
எவ்வாறு? எனப் பார்ப்போம்.முதலில் 
வன்தட்டில் அதிக இடத்தை பிடிக்கும் பைல்களை 
கண்டறிவது எவ்வாறு? எனப் பார்ப்போம்.
வன்தட்டில் அதிக இடத்தை பிடிக்கும் பைல்களை கண்டறிய 
Folder Size என்ற இலவச மென்பொருள் ஒன்று உதவுகிறது.
இம்மென்பொருளை நிறுவ உங்கள்கணினி பின்வரும் தகுதிகளை குறைந்த பட்சம் பூர்த்தி 
செய்திருத்தல் வேண்டும்.



Operating system: Windows 7/Vista/XP/NT/ME/2000/2003/98
CPU: Pentium-233 MHz or higher
128 MB RAM
5 MB free hard disk space
True Color display and video card
Mouse or other pointing device 
 
நீங்கள் மேற்படி தகுதிகளை பூர்த்தி செய்திருந்தால் மேற்படி மென்பொருளை தரவிறக்க 
இங்கே http://www.mindgems.com/software/FolderSize.exe செல்லுங்கள்.இதனை கொண்டு உங்கள் 
வன்தட்டில் உள்ள விரும்பிய பகுதிகளையோ அல்லது முழுவதையுமோ பரிசோதிக்க முடியும்.
அத்துடன் files and folders ன் பின்வரும் விபரங்களையும் நாம் கண்டறிய முடியும்.


Name
Folder size
Size percentage from the parent folders size
Files count inside the folder
Subfolders count
Creation time
Last modification time
Last access time Folder owner and group
 
இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவி செயற்படுத்தும்போது பின்வரும் இடைமுகம் கிடைக்கும்.
இம்மென்பொருளை செயற்படுத்தி உங்கள் வன்தட்டை பரிசோதிப்பதன் மூலம் அதிக இடத்தை 
பிடிக்கும், அடிக்கடி பயன்படுத்தாத மென்பொருட்களை கண்டறிந்து பின் அவற்றை Unstall 
செய்து விடுங்கள்.
சரி, அடுத்து கணினியில் உள்ள தேவையற்ற நகல் கோப்புகளை கண்டறிந்து 
அதனை எவ்வாறு? நீக்குவது என்று பார்ப்போம்.
நாம் ஒரே மாதிரியான பைல்களை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறான 
சந்தர்ப்பங்களில் சேமித்து வைத்திருப்போம். இவ்வாறு ஒத்த கோப்புக்கள் 
வெவ்வேறான இடங்களில் நகல்களாக திரும்பத் திரும்ப சேமிப்பதன் மூலமும் 
நாம் வன்தட்டின் இடக் கொள்ளளவை வீண் விரயம் செய்கிறோம். இது நமது 
மறதியாலோ அல்லது ஓரே கணினியை பல பயனர்கள் பாவிப்பதாலோ நிகழலாம். 
எனவே நகல்களை அழிப்பதன் மூலமும் கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்.
இவ்வாறான நகல்களை கண்டறிந்து அழிக்க Fast Duplicate File Finder என்ற 
இலவச மென்பொருள் உதவுகிறது. இம்மென் பொருளை நிறுவவும் மேலே முதலாவதாக 
சொல்லப்பட்ட மென்பொருளை நிறுவ தேவைப்பட்ட தகுதிகளை கொண்டிருத்தல் போதுமானது.
 இம்மென்பொருளை தரவிறக்க இங்கே http://www.mindgems.com/software/FastDuplicateFileFinder.exe 
செல்லுங்கள்.
இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவி செயற்படுத்தும்போது பின்வரும் இடைமுகம் கிடைக்கும்.
இம்மென்பொருளை செயற்படுத்திய பின் மேலே உள்ள படத்தில் காட்டப்பட்ட ஒழுங்கில் உங்கள் 
விருப்பத்தெரிவுகளை மாற்றலாம்.
இலக்கம் 1 என காட்டப்பட்டுள்ள "Add Folder" button ஐ சுட்டி நீங்கள் பரிசோதிக்க விரும்பும் 
வன்தட்டின்பகுதியை இல்லது போல்டர்களை தெரிவு செய்யுங்கள்.
இலக்கம் 2 என காட்டப்பட்டுள்ள பகுதியில் சென்று நீங்கள் பரிசோதிக்க விரும்பும் முறையை 
தெரிவு செய்யவும்.
 
இலக்கம் 3 என காட்டப்பட்டுள்ள பகுதியில் சென்று நீங்கள் பரிசோதிக்க விரும்பும் நகல்களின் 
ஒத்த தன்மையை தெரிவு செய்யவும்.
இலக்கம் 4 என காட்டப்பட்டுள்ள பகுதியை சுட்டி பரிசோதிக்கவும்.
பரிசோதனையின் முடிவில் பின்வரும் இடைமுகம் கிடைக்கும்.


மேலுள்ள படத்தில் காட்டப்பட்டவாறு: 
இலக்கம் 1 என காட்டப்பட்டுள்ள "Auto Check " button ஐ சுட்டி நீங்கள் பரிசோதித்து கண்டறிந்த 
நகல்களில் மாற்றம் செய்ய விரும்பும் பைல்களை தெரிவு செய்யவும்.
இலக்கம் 3 என காட்டப்பட்டுள்ள "Move Checked Files" button ஐ சுட்டி நீங்கள் பரிசோதித்து 
கண்டறிந்த நகல்களில் Move செய்ய விரும்பும் பைல்களை விரும்பிய இடத்திற்கு Move 
செய்யவும்.
 
இலக்கம் 4 என காட்டப்பட்டுள்ள "Delete Checked Files" button ஐ சுட்டி நீங்கள் பரிசோதித்து 
கண்டறிந்த நகல்களில் Delete செய்ய விரும்பும் பைல்களை Delete செய்யவும்.
இந்த இரண்டு மென்பொருட்களும் நம் கணினியின் வேகத்தை குறைய விடாமல் பேணுவதற்கு
 மிகவும் இன்றியமையாதவையாகும்.

                                                    நன்றி...........

                                 http://pc-park.blogspot.com/2011/08/blog-post.html#ixzz1iBVy8wdE

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF