welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Saturday, 31 December 2011

உங்கள் கம்ப்யூட்டரை மற்றவர் திறக்காமல் இருக்க பாஸ்வேர்ட் செட்டப் செய்வது எப்படி ?


வணக்கம் நண்பர்களே!!

கம்ப்யூட்டரை புதிதாக பயன்படுத்துபவர்களுக்கு....

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் எல்லோருக்கும் தன்னுடைய கம்ப்யூட்டருக்கு ஒரு பாஸ்வேர்ட் செட்டப் செய்யவேண்டும் நம் கம்ப்யூட்டரை நம் அனுமதி இல்லாமல் வேறு எவரும் திறக்கக்கூடாது என்று ஒரு என்னம் இருக்கும். ஆனால் அந்த பாஸ்வேர்டை எப்படி செட்டப் செய்யவேண்டும் என்று நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். மிகவும் எளிதாக இங்கே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

முதலாவதாக ஸ்டார்ட் (Start) பட்டனை அழுத்துங்கள். அடுத்து அதில் வரும் கண்ட்ரோல் பேனல் (Control Panel) என்ற பட்டனை அழுத்துங்கள்.



இரண்டாவதாக Control Panel ல் வரும் User Accounts என்ற பட்டனை அழுத்துங்கள்.



மூன்றாவதாக நீங்கள் எந்த User Name க்கு பாஸ்வேர்ட் செட்டப் செய்யவேண்டுமோ அந்த User Name ஐ அழுத்துங்கள்



நான்காவதாக Create Password என்ற இடத்தை அழுத்துங்கள்



ஐந்தாவது இடத்தில் உங்களுக்கு விருப்பமான பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். ஆறாவது இடத்திலும் மறுபடியும் நீங்கள் முன்பு டைப் செய்த பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். ஏழாவது இடத்தில் உங்களுடைய பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிடாமல் இருக்க ஒரு சிறு குறிப்பை டைப் செய்யுங்கள். உதாரணத்திற்க்கு நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட் உங்களுடைய ஒரு டெலிபோன் நம்பராக இருந்தால் இந்த Password Hint ல் my tel no என்று டைப் செய்யலாம். அடுத்து எட்டாவது இடத்தில் உள்ள Create Password என்ற பட்டனை அழுத்துங்கள்.



இப்பொழுது உங்கள் கம்ப்யூட்டருக்கு நீங்கள் பாஸ்வேர் செட்டப் செய்துவிட்டீகள்.
(இந்த பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிடவேண்டாம். மறந்துவிட்டீர்கள் என்றால் உங்கள் கம்ப்யூட்டருக்குள் உங்களால் கூட போக முடியாது)

சரி......... இப்பொழுது உங்கள் கம்ப்யூட்டரில் பாஸ்வேர்ட் செட்டப் செய்துவிட்டீர்கள் என்பதை எதை வைத்து உறுதி செய்வது.

கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒன்பதாவது இடத்தில் உங்கள் User Name க்கு கீழே Password Protected என்று எழுதப்பட்டிருக்கு. இதன் மூலம் உங்கள் User Name பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.




அடுத்து நம்பர் 10 முதல் 15 வரை உங்கள் விருப்பத்திற்க்கு விடப்பட்டுள்ளது.

அதாவது பத்தாவது இடத்தை கிளிக் செய்து நீங்கள் உங்கள் User Name ஐ வேறு பெயராக மாற்றிக்கொள்ளலாம்.

11வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம்.

12வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் கொடுத்த பாஸ்வேர்டை நீக்கிவிடலாம்.

13வது இடத்தை கிளிக் செய்து உங்கள் User Name க்கு உங்களுக்கு விருப்பமான போட்டோவை இனைக்கலாம். உங்களுடைய போட்டோவைகூட சேர்த்துக்கொள்ளலாம்.

14வது இடத்தை கிளிக் செய்து உங்கள் அக்கவுண்ட் டைப்பை மாற்றிக்கொள்ளலாம். அதாவது உங்கள் அக்கவுண்ட் சாதாரண அக்கவுண்டாக இருந்தால் Administrator அக்கவுண்டாக மாற்றிக்கொள்ளலாம்.(இந்த Administrator அக்கவுண்டில் கம்ப்யூட்டரில் சில விசங்களை மாற்றக்கூடிய எல்லாவிதமான உரிமையும் உங்களுக்கு கிடைக்கும்.)

15வது இடத்தை கிளிக் செய்து நீங்கள் புதிதாக உருவாக்கிய இந்த அக்கவுண்டையே அழித்துவிடலாம்.


நன்றி...........கான் http://tamilcomputertips.blogspot.com/

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF