வணக்கம் நண்பர்களே!!
கூகுளில் பேசி தேடுவோம் |
கூகுள் தளம் நாளுக்குநாள் தன் எல்லையை விரிவாக்கி கொண்டே செல்கிறது .
தினமும் புது புது வசதிகளை கொடுத்து கொண்டு இருக்கிறது .
அதன் அசுர வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது . கூகுள் நாம் பேசி தேடும் வசதி வந்து பல நாட்கள் ஆகிவிட்டது .
அதை பல நாளுக்கு முன்னாலே நான் பார்த்தேன் .
ஆனால் அப்போது ஒன்றும் புரியவில்லை . இன்று தான் புரிந்து அறிந்து கொண்டேன் .
அது வேறொன்றும் இல்லை நாம் எதையும் தட்டச்சு செய்ய தேவை இல்லை .
சொன்னால் போதும் .
சொல்லிவிட்டு search பட்டனை அழுத்தவும் தேவை இல்லை . நாம் பேசிய வுடனே அதன் முடிவுகளை காட்டி விடும் .
இது ஆச்சரியமான தேடுதல் .
1.முதலில் கூகுள் குரோம் பதிவிறக்கி கொள்ளுங்கள் .
2.google.com க்குசெல்லுங்கள் . அது google.co.in எனும் கூகுளின் இந்திய
பக்கத்துக்கு கொண்டு செல்லும் . பரவாயில்லை அந்த பக்கத்தின் கீழே go to
google .com என்று இருக்கும் .
3.இப்போது உள்ளிடு (type box ) ஒரு மைக் போன்ற குறியீடு இருக்கும்
அதை கிளிக் செய்து பேச ஆரம்பியுங்கள் .
பேசி முடித்தபின்ஒன்று சுருண்டு தன் முடிவை காண்பிக்கும் .
இதில் முக்கிய மான ஒன்று நீங்கள் பேசுவது அமெரிக்கன் ஆங்கிலமாக இருக்க வேண்டும் . உள்ளூர் மொழிகள் எல்லாம் எடுபடாது .
நானும் அமெரிக்க ஆங்கிலத்தில் பேசிப்பார்த்தேன் . ஏதேஏதே வந்தது .
பிறகு தமிழில் " அப்படா " என்று சொன்னவுடன் ha ha ha என்று வருகிறது .
கூகுள் நம்மகிண்டல் பண்ணுதான் .
இந்த வீடியோவை பார்த்தாலே உங்களுக்கே புரியும் .
தயவு செய்து கருத்துரை இடவும் .
நன்றி ...Enter the world..
|
No comments:
Post a Comment