நம் எல்லோரிடமும் பென் ட்ரைவ் (pen-drive) வும் அதில் சில வைரஸ் (virus)சும் காணப்படுவது வழக்கமே. எனவே நம் கணணிகளுக்கு வைரஸ் உட்புகாமலிருக்க ஒவ்வொருவரும் சில வழிகளை தேடிக்கொண்டிருப்போம்.
இவ்வகையில் உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்றுAutorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இது வின்டோஸ் ( windows )இயங்குதளங்களிலேயே பரவலாக தாக்குகின்றது. எனவே இவ் ஒடோரன் வைரஸ் நம் கணணியை பாதுகாப்பது எப்படி?
நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்கள் பென் ட்ரைவரில் வைரஸ் உள்ளது என உணருவீராயின் சிறந்த அன்டி வைரஸ் (anti-virus) ஒன்றை நிறுவுங்கள், அதுவும் எந்நாளும்update செய்து கொள்ளக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறன அன்டி வைரஸ்கள் பலவும் இலவசமாக கிடைக்கின்றது.
இப்போது பார்ப்போம் எப்படி Autorun ஐ தடுப்பது என்று.
01. Run command ஐ (Ctrl + R) திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.
02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்
03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.
04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay என்பதற்கு கீழுள்ள Enabled என்பதையும்Turnoff Autoplay on இல் All drives தெரிவு செய்யுங்கள்.
05. இப்பொழுது நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும் வரை அது தானாக திறக்காது.
நன்றி...exexpress.
நன்றி...exexpress.
|
No comments:
Post a Comment