நன்றி..
வணக்கம் நண்பர்களே !! நாம் windows இல் New folder ஐக் Create பண்ணி அதற்கு பெயர் எதுவும் கொடுக்காவிட்டால் Windows ஆனது New Folder எனும் பெயரயே default ஆக எடுத்துக் கொள்ளும்.
பெயர் ஏதும் வழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். ஒரு போதும் பெயரில்லாமல் ஒரு போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது.
Space bar அல்லது Delete key போன்றவற்றை திரும்பத் திரும்ப அழுத்தினாலும் New Folder எனனும் பெயரையே windows எடுத்துக் கொள்ளும். அதற்காகத் தான் இந்த முறை
முதலில் ஒரு போல்டரை வழமையான முறையில் உருவாக்கிக் கொள்ளுங்கள் அதை Rename செய்து Alt + 255 டைப் செயுங்கள்.( இதில் இலக்கத்தை டைப் செய்ய Keyboard இல் Numeric keypad ஐப் பயன் படுத்த வேண்டும்) அப்போது நீங்கள் உருவாகிய Folder ஆனது பெயரில்லாமல் இருப்பதை அவதானிக்கலாம் .பெயரில்லாமல் உருவாகிய அந்த Folder ஐ இனி எவ்வாறு மறைக்கலாம் என்று பார்ப்போம்
அடுத்து அந்த Folder இன் மேல் Right click செய்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் Properties window இல்படத்தில் காட்டியவாறு Customize tab ஐக் click செய்யுங்கள். அங்கு Folder Icons பகுதியின் கீழ் உள்ள Change Icon என்ற Button இல் click செய்ய Folder க்குரிய ஏராளமான Icon களைக் காணலாம்.
அந்த Icon களுக்கு நடுவே ஓரிடத்தில் வெற்றிடம் இருப்பதை அவதானிக்கலாம்.அந்த வெற்றிடத்தில் Click செய்ய அந்த இடம் தெரிவு செய்யப்படும். அந்த வெற்றிடமே நாங்கள் உருவாக்க இருக்கும் போல்டருக்குரிய Icon. இப்போது Ok செய்து விடுங்கள். அவ்வளவுதான்
இப்போது நீங்கள் உருவாக்கிய அந்த போல்டர் மறைந்து விடுவதைக் காணலாம். இந்த போல்டரில் உங்கள் ரகசிய ஆவணங்கள் மற்றும் பைல்களை இட்டு பாதுகாக்கலாம்.
யாருமே இலகுவில் கண்டுபிடிக்க மாட்டார்கள். இது வழமையாக போல்டர்களை மறைத்து (Hidden Folders) வைக்கும் முறையை விடவும் பாதுகாப்பானதாகும்
|
No comments:
Post a Comment