போட்டோக்களை பென்சில்- பேனா - ஸ்கெட்ச என விதவிதமாக மாற்றுவதில் நிறைய சாப்ட்வேர்கள். உள்ளன.Instant Photo Sketch அதில் ஒன்று.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் தேவையான புகைப்படத்தினை உங்கள் கணிணியில் இருந்து தேர்வுசெய்யவும்.
இதன் வலது புறம் பேனா - பென்சில் - போஸ்டர் - கலர் ஸ்கெட்ச் என விதவிதமமான ஸ்லைடர்கள் இருக்கும். அதில் என்ன தேவையோ அதனை தேர்வு செய்யவும். பின்னர் அதில் உள்ள அளவிற்குஎற்ப நமக்கு தேவையான அளவிற்குபடத்தினை மாற்றிக்கொள்ளலாம்.
பிரிவியு பார்க்கும் வசதியும் படத்தினை சூம் செய்து பார்க்கும் வசதியும் உள்ளது. மேலும் படத்தினை மாற்றியவுடன் அதன் ஒரிஜினல் இமேஜ் யும் நாம்பார்த்து கொள்ளலாம்.
இறுதியில் நமக்குபிடித்திருந்தால் அதனை சேவ் செய்து உபயோகிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்
|
No comments:
Post a Comment