welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Wednesday, 6 March 2013

பாண்ட்களை சுலபமாக சேர்க்க -நீக்க...


போட்டோஷாப்.டிடிபி.வேர்ட்,எக்ஸெல் என பாண்ட்களை எங்கு எங்கு உபயோகிக்கின்றோமோ அந்த இடங்களில் இந்த பாண்ட் லோடர் மிகவும் பயன்படும். விதவிதமான பாண்ட்களை விரும்புகின்றவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துவிடுவார்கள். மொத்தமாக பாண்ட்கள் சேர்ந்து அவசரத்திற்கு ஒரு டிசைன் கிரியேட்டிவ் செய்யவேண்டுமானால் நாம் அனைத்து பான்ட்களையும் ப்ரிவியு பார்க்கவேண்டும். ஆனால் அதனை தவிர்த்து தேவையானபோது மட்டும் பாண்ட்டை அப்லோடு செய்து பயன்படுத்திவிட்டு கையோடு அதனை அன்இன்ஸ்டால் செய்துவிடலாம்.இதனை நமக்கு ஹார்டிஸகில் தேவையில்லாத பைல்கள் சேர்வதை தடுக்கலாம். 200 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய 
இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள செலக்ட்பாண்ட் கிளிக் செய்து உங்களுக்கான பாண்ட்டை தேர்வு செய்யுங்கள். அடுத்து இதில் உள்ள லோடு பாண்ட் கிளிக் செய்யுங்கள்.உங்களது பாண்ட்ஆனது சி டிரைவில் சென்று அமர்ந்துகொள்ளும். உங்கள் பணியை செய்துமுடியுங்கள். அடுத்து உங்கள் அனைத்து வேலைகளும் முடிந்தபின் இந்த சாப்ட்வேரினை மீண்டும் கிளிக்  செய்து உங்களுக்கான பாண்டை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள அன்லோடு பாண்ட்ஸ் கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவீல் பாருங்கள்.

உங்களது பாண்ட் சிடிரைவிலிருந்து நீக்கியபின் உங்களுக்கு கீழ்கண்ட தகவல் வரும்.

நீங்கள் இன்ஸ்டால் செய்த பாண்ட்; ஆனது இப்போது காணாமல் போய்இருக்கும். இந்த வசதி உள்ளதால்  நாம் அதிகபடியான பாண்ட்களை பயன்படுத்த முடியும்.சுலபமாக இன்ஸ்டால் செய்யலாம். வேலை முடிந்ததும் அன்இன்ஸ்டால் செய்யலாம்.பயன்படுத்திப்பாருங்கள்..

நன்றி........வேலன்..

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF