உங்களுக்கு போட்டோஷாப் பற்றி ஒன்றும் தெரியாதா...கவலைவேண்டாம். இந்த சாப்ட்வேர் உங்கள் போட்டோவின் டிசைன்களை தானே செய்துவிடும். 45 எம்..பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நடுவில் உள்ள லோட் இமேஜ் என்பதில் உங்களுடைய புகைப்படத்தினை ஹார்ட் டிரைவிலிருந்து தேர்வு செய்யுங்கள்.இதில் Styles.Adjust.Borders & Favourites என நான்குவிதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். இதில் முதலில் உள்ள ஸ்டைல் கிளிக் செய்ய விதவிதான ஸ்டைலில் உங்களுக்கான புகைப்படங்கள் வரிசையாக தோன்றும். தேவையானதை கிளிக் செய்து சேமித்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். புகைப்படத்தில் ஏதாவது அடஜஸ்ட் செய்து மாற்ற விரும்பினால் இரண்டாவது டேபினை கிளிக் செய்யவும். உங்களுக்கு விதவிதமான மாறுதல்களுடன் புகைப்படங்கள் தோன்றும். தேவைப்படுவகை கிளிக் செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். மூன்றாவதாக புகைப்படங்களுக்கு பார்டர் கொண்டுவருவது. விதவிதமான பார்டர்கள் ப்ரிவியுவில் கொடுத்து உள்ளார்கள்.தேவைபடுவதை நீங்கள் கிளிக் செய்யலாம்.உதாரணத்திற்கு பிலிம் ரோல் எபெக்ட் கொண்டுவரவேண்டுமானால் இதில் உள்ள பிலிம்ரோல் எபெக்ட் கிளிக் செய்ய உங்களுககான புகைப்படம் மாறிவிடும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
|
No comments:
Post a Comment