welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Wednesday 28 December 2011

மருத்துவ குணங்கள் கொண்ட தாய்ப்பால்


வணக்கம் நண்பர்களே!

குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது சிறந்த தொடக்கம் என்பதை நாம் அறிவோம். ஆனால் நோய்களை விரட்டும் மருத்துவ குணமும் தாய்ப்பாலுக்கு உண்டு என்பதை நிபுணர்கள் இப்போது தெரிவிக்கிறார்கள். தாய்ப்பாலில் உள்ள மூலச் செல்களுக்கு மறதி வியாதி முதல் புற்றுநோய் வரை விரட்டும் ஆற்றல் உண்டு என்று சர்வதேச நிபுணர் குழு தெரிவித்துள்ளது.தாய்ப்பாலில் உள்ள மூலச் செல்கள், கருவில் உள்ள செல்களைப் போன்று உள்ளன. உடலில் உள்ள எந்தச் செல்லின் தன்மையையும் மாற்றியமைக்கும் ஆற்றலுடையவை மூலச் செல்கள்.


புற்றுநோய், நீரிழிவு, பார்வைக் குறைபாடு, முடக்குவாதம் போன்ற நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இச்செல்களுக்கு உண்டு என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


மூலச் செல் மருத்துவத்தில் தாய்ப்பால் புதிய ஆராய்ச்சி வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது என்று மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் ஹசியோடோவ் தெரிவிக்கிறார்.


தாய்ப்பாலில் உள்ள மூலச் செல்கள் பன்முகப் பயன்பாட்டுத் தன்மை மிக்கதா என்பதற்கு நிறைய ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அவை கருத்தன்மை மிக்கதாக இருந்தால் மூலச் செல்களைப் பெற இது ஒரு புதிய வழியாக அமையும் என்று லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் கிரிஸ் மேசன் தெரிவித்தார்.


அவற்றுக்கு பன்முகப் பயன்பாட்டுத்தன்மை இல்லை என்றாலும், தாய்மார்கள் தங்கள் தாய்ப்பாலில் உள்ள மூலச்செல்களை சேர்த்து வைத்து பிற்காலங்களில் வரும் நீரிழிவு போன்ற நோய்களை குணமாக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நியு கேசில் பல்கலைக்கழக விஞ்ஞானி லைல் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்தார்.


நன்றி......பதிப்புஉரிமை......நிலவை தேடி

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF