welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Tuesday, 31 January 2012

கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள்...

வணக்கம்நண்பர்களே!!  
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை

அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.


சில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில், அனைத்து புரோகிராம் களையும் மூடிவிடவும் என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம் களையும், ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும். இது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில், சில புரோகிராம்களை மூட முடியாமல் முடங்கிப் போய், தொடக்கத்தில் குறிப் பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டிய திருக்கும். இது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச புரோகிராம் ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த புரோகிராம் ஒரு வேலையை நமக்காக, எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது. அது, இயங்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடுவதுதான். இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்து விட்டால், பின் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் மூடிவிடலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கினால், கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது. “x” பட்டனை அழுத்தினால், புரோகிராம்கள் மூடப்படுகின்றன. மண்டை ஓட்டுடன் எலும்புகளைக் கொண்டுள்ள அபாய சின்னம் கொண்ட பட்டனை அழுத்தினால், அனைத்து புரோகிராம்களும் "கொல்லப்(kill)படுகின்றன'. இரண்டிற்கும் என்ன வேறுபாடு? என நீங்கள் கேட்கலாம். ஒரு புரோகிராமினை மூடுகையில், முறையாக அது மூடப்படும். 
ஆனால் அது முறை யாக மூடப்படாவிட்டால், அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது. 


நன்றி...............நிலவைதேடி...

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF