welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Wednesday 4 January 2012

பாஸ்வேர்டை மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி உருவாக்க..


வணக்கம் நண்பர்களே!!

இணையத்தில் பல சேவைகளை நாம் உபயோகிக்க அதில் உறுப்பினர் ஆகி நமக்கென்று ஒரு கடவுச்சொல் உருவாக்கினால் தான் சில வசதிகளை  பயன்படுத்த முடியும். இப்படி நாம் உருவாக்கும் பாஸ்வேர்டை இன்னொருவர் கண்டறிந்து நம்முடைய தகவல்களை அழித்தோ, அல்லது நமது கணக்கை முடக்கவோ செய்துவிடுகின்றனர். இந்த செயலில் தவறு நம் மீதும் உள்ளது பாஸ்வேர்ட் உருவாக்கும் பொழுது பாஸ்வேர்டை கடினமாக உருவாக்க வேண்டும்.
எண்கள்,பெரிய எழுத்துக்கள்(capital Letters), சிறிய எழுத்துக்கள்(Small Letters), மற்றும் குறியீடுகள்(Special Characters) ஆகியவை கலந்து ஒரு பாஸ்வேர்டை உருவாக்கினால் உங்கள் பாஸ்வேர்ட் யாராலும் கண்டறிய முடியாது. மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இது போல பாஸ்வேர்டை எப்படி உருவாக்குவது என பார்க்கலாம். இது போல பாஸ்வேர்டை உருவாக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

இன்ஸ்டால் செய்யும் முறை:

 டவுன்லோட் செய்த மென்பொருளை(.exe) இன்ஸ்டால் செய்ய டபுள் க்ளிக் செய்து வரும் விண்டோவில் Run கொடுக்கவும்.
 அடுத்து வரும் விண்டோவில் Next கொடுக்கவும். அந்த விண்டோவில் டூல்பார் இன்ஸ்டால் ஆப்சன் இருக்கும் அதில் உள்ள டிக் மார்க்கை நீக்கி விடவும்.
 அடுத்து வரும் கீழே இருப்பதை போல இரண்டு விண்டோ வரும் அதில் உள்ள SKIP பட்டணை அழுத்தவும்.




அடுத்து கடைசியாக Finish என்ற பட்டணை அழுத்தினால் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகி மென்பொருள் ஓபன் ஆகும்.

உபயோகிக்கும் முறை:

 முதலில் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுக்கான பாஸ்வேர்டை தேர்வு செய்யுங்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க இந்த பாஸ்வேர்டை கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும்.
 அடுத்து  உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.




இதில் Password Length என்ற இடத்தில் உங்கள் பாஸ்வேர்ட் அளவை தேர்வு செய்து (குறைந்தது 10 தேர்வு செய்யவும்) அடுத்து கடைசியாக உள்ள Quantity என்ற இடத்தில் உங்கள் எதனை பாஸ்வேர்ட் வேண்டுமோ அதி தேர்வு செய்து கீழே உள்ள Create Password(s) என்ற பட்டணை அழுத்தவும்.
    அடுத்து உங்களுக்கான பாஸ்வேர்ட்கள் லிஸ்ட் வரும்.  




இதில் பச்சை நிறத்திலும், வெளிர் நீல நிறத்திலும் உள்ள paaswerdkal சிறந்த பாஸ்வேர்ட்கள். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் ஏதேனும் பாஸ்வேர்ட் வந்தால் அவைகளை உபயோகிக்க வேண்டாம்.
இந்த மென்பொருளில் ஒரு முறை வந்த பாஸ்வேர்ட் திரும்பவும் வாராது ஆகையால் நம்முடைய பாஸ்வேர்ட் மற்றவர்க்கும் தெரியலாம் என்ற அபாயம் இல்லை.
 இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக நம்முடைய பாஸ்வேர்டை சேமித்து வைக்க Password Manager என்ற வசதியும் உள்ளது. இதானால் நாம் பாஸ்வேர்டை மறந்துவிடுவோம் என்ற பயமும் இல்லை.
இது போன்று நமது பாஸ்வேர்டை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்கவும்.


தரவிறக்க சுட்டி 

நன்றி..............Jaffna pc 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF