welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Sunday, 4 December 2011

பேஸ்புக்குக்கு அடிமையாகும் பயனர்கள்.

வணக்கம் நண்பர்களே!!
              உலகம் முழுதும் பெருவளர்ச்சி கண்ட சமூக வலைத்தளம் ஃபேஸ்புக்.கணினி பயன்படுத்துபவர்கள் தினமும் பார்க்காதவர்கள் குறைவு. பல குழுக்கள் இருக்கின்றன.குருதிக் கொடையாளர்களுக்கு குழுக்கள் உள்ளன.சமூகப் பிரச்சினைகளை பேச,வாசகர் வட்ட்த்திற்கு,சினிமா ரசிகர்களுக்கென்று பல குழுக்கள்.ஏராளமான நல்ல விஷயங்கள் இதில் உண்டு.பதிவுகள் உள்பட பல தகவல்கள் ஏராளமானவர்களை சென்றடைகின்றன.
                             இன்று பேஸ்புக்
இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும்,அடிமையாக மாறிவருவதாக பலர் சுட்டிக் காட்டி வருகிறார்கள்.நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட விஷயம் இது.அலுவலகத்தில் வேலை செய்யாமல் பேஸ்புக்கில் இருந்திருக்கிறார் ஒரு ஊழியர்.வேலை செய்யுமாறு அலுவலர் சத்தம் போட்ட்தும் பாத்ரூம் சென்று வருவதாக சென்றுவிட்டார்.
                             பாத்ரூம் சென்றவர் இரண்டு அறை தாண்டி இருக்கும் இன்னொரு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் முன்பு போய் உட்கார்ந்து விட்டார்.அலுவலகப் பணிகளுக்கு இது ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது.பொது மக்கள் போய் ஏதாவது கேட்டாலும் எரிந்து விழுகிறார்கள்.கிட்ட்த்தட்ட கட்டிப்போட்டு விட்ட்து.
                             பிரௌசிங் செண்டரில் அதிகம் பார்க்கப்படுவது பேஸ்புக் என்கிறார் ஒரு உரிமையாளர்.” சோறு,தண்ணிகூட வேண்டாம் சார்,சிலருக்கு பேஸ்புக் இருந்தால் போதும்.என்றார்.சர்வர் பிரச்சினை போன்ற காரணங்களால் இணைய இணைப்பு கிடைக்காத போது பலர் எரிந்து விழுகிறார்கள்.வரும்போதே உடலும்,மனமும் பரபரக்கத்தான் வருவார்கள்.
                            ஒரு பழக்கத்தை விட முடியாமல்’’’’”’ “இல்லாவிட்டால் உடலும் மனமும் பாதிக்கப்படும் நிலை அடிமையாகி விட்ட்தைக் குறிக்கும்.பேஸ்புக்தான் என்றில்லை,வலைப்பதிவுக்கு கூட ஒருவர் அடிமையாக முடியும்.நாம் கற்றுக்கொண்ட பழக்கம் நம்மை ஆளும் நிலைதான் அடிமைத்தனம்.மதுவுக்கு,போதைப்பழக்கத்துக்கு,புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள்.
                             மதுவுக்கு அடிமையானவர்கள் தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு குடிக்காவிட்டால் முடியாது.மனம் அமைதி இழக்கும்.விளைவாக உடலில் மாற்றங்கள் உருவாகும்.எரிந்து விழுவார்கள்.எப்படியாவது,எப்படியாவது என்று மனம் தேடும்.பேஸ்புக் போன்றவையும் இப்படி அடிமையாக்க முடியும்.மேற்கண்டவாறு மனதிலும்,உடலிலும் மாற்றங்கள் உருவானால் அடிமையாகி விட்டார் என்பதே பொருள்.
                              சமூகத்தில் பேஸ்புக் பயன்படுத்துவதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.ஆனல் ஒருவர் அடிமையாகி விட்டாரா என்பதை கிடைக்காத்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்.சொந்தமாக கம்ப்யூட்டர்,இல்லாவிட்டால் செல்போன் இருக்கிறது.அதனால் எளிதில் நமக்கு தெரியாது.எப்போதும் கிடைப்பதால் பிரச்சினை சீக்கிரம் வெளியில் தெரியாது.
                               பேஸ்புக்கின் அரட்டைகளுக்கு அடிமையாகிப் போனால் பெண்ணுக்கு திருமணத்திற்கு பின்னால் பிரச்சினையாக முடியலாம்.எந்த பழக்கமும் நம்மை ஆளாமல் நாம் அதனை ஆள வேண்டும்.முடியாத நிலையில் தயங்காமல் ஆலோசனை பெறலாம்.கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாம்.எந்த சமூக வலைத்தளங்களையும் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்கள் அடிமையாக வாய்ப்பில்லை.

நன்றி........
http://enganeshan.blogspot.com/2011/12/blog-post_23.html

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF