welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Sunday 4 December 2011

காபி குடிப்பீங்களா?

வணக்கம் நண்பர்களே!!
                    கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு அது.பேராசிரியர் ஒருவரது வீட்டில் கூடினார்கள்.ஒவ்வொருவரும் வாழ்க்கையில் செட்டில் ஆகியிருந்தார்கள்.தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.கிட்ட்த்தட்ட எல்லோரும் முணுமுணுத்தார்கள்.அவர்களது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்கள்.வாழ்க்கை எளிதாக இல்லை.


                                  வேலை குடும்பம் என்று மனதில் ஏற்படும் இறுக்கத்தையும்,வலியையும் குறிப்பிட்டார்கள்.டென்ஷன்,டென்ஷன் என்று குரல் கொடுத்தார்கள்.கல்லூரி வாழ்க்கை போன்ற வசந்தகாலத்தை அனுபவிக்கவே முடியவில்லை.இன்றைய அவசர வாழ்வின் பரிமாணங்களை பற்றி விவாதங்கள் போய்க்கொண்டிருந்த்து.பேராசிரியர் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார்.

                                  மனதளவில் பழைய மாணவர்கள் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு காபி தரவேண்டுமென்று முடிவு செய்து அவரே தயாரிக்க கிளம்பினார்.மற்றவர்கள் தங்கள் மலரும் நினைவுகளை அசை போட்டுக்கொண்டிருந்தார்கள்.பேராசிரியர் காபி தயாரித்து முடித்துவிட்டார்.வந்திருக்கும் அனைவருக்கும் வீட்டிலிருக்கும் காபி கப்,தம்ளர்கள் போதாது.

                                   பேப்பர் கப்போ,பிளாஸ்டிக் கப்போ வாங்கிவரலாமென்றால் கடையும் வெகு தூரம்.வீட்டில் இருப்பதை வைத்தே சமாளித்து விடலாமென்று முடிவு செய்து விட்டார்.பீரோவில் இரண்டு வெள்ளித்தம்ளர்கள் இருந்த்து.சில கண்ணாடி தம்ளர்கள்,சில்வர்,மண் குவளை என்று விதம்விதமான கப்களையும்,தம்ளர்களையும் பிடித்து விட்டார்.ஒரு வழியாக வந்திருக்கும் அனைவருக்கும் ஏற்பாடு செய்தாகிவிட்ட்து.

                                   காபியை கப்களிலும்,தம்ளர்களிலும் அவரே ஊற்றி அனைவரையும் எடுத்துக்கொள்ளச்சொன்னார்.மாணவர்களும் ஆளுக்கொன்றை எடுத்துக்கொண்டார்கள்.சிலர் காபி குடிக்கும் பழக்கம் இல்லை என்று மறுத்து விட்டார்கள்.அதனால் சில கப்களும்,தம்ளர்கள் மட்டும் டேபிளிலேயே இருந்த்து.டேபிளில் மீதமிருக்கும் கப்களை கவனியுங்கள்’’ என்றார் பேராசிரியர்.

                                   யாரும் எடுக்காத மிச்சமிருக்கும் குவளைகள் விலை குறைவானவை மற்றும் அழகில்லாதவை.பேராசிரியர் பேசினார்.நான் கவனித்துக்கொண்டிருந்தேன்,முதலில் எடுக்க வந்தவர்கள் அதிக விலையுள்ள கப்களையும்,அழகானவற்றையும் எடுத்தார்கள்.அனைவரது கையும் அவற்றுக்குத்தான் நீண்டன! ஏன்? நீங்கள் குடிக்கப்போவது காபியத்தானே? கப்பையோ,தம்ளரையோ இல்லையே?

                                 பெரும்பாலானவர்களுக்கு வரும் மன இறுக்கமும்,கவலைகளும் இந்த வகைதான்.காபியை மறந்து விட்டு கப்பை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.வாழ்க்கையை வாழ்வதை விட்டுவிட்டு வறட்டு கௌவரவத்துக்காக அவசியமில்லாத்தை தேடி டென்ஷன் ஆகிறீர்கள்.தூக்கம்கெட்டு தவிக்கிறீர்கள்.அப்புறம் மன அழுத்தம்,கவலை என்று போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

                                   எளிதாக புரியும் விஷயம்தான்.கொஞ்சம் யோசித்தால் நாமும் சந்தோஷத்தை வரவழைத்துக்கொள்ளலாம்.கப்பை விட்டுவிட்டு நாம் காபியை கவனிப்போம்.

நன்றி...
http://enganeshan.blogspot.com/2011/12/blog-post_23.html

3 comments:

Tamil CC said...

நான் உங்களுக்கு அக்குரியீட்டை அனுப்பி விட்டேன் srikumarandigitalstudio7@gmail.com

மீண்டும் அனுப்பி விடுக்கின்றேன்...

Tamil CC said...

I thing ur Mail ID is Wrong.
please send a Email from ur Own Mail ID to powerthazan@gmail.com . I'll send JS Code as Reply.

srikumarandigitalstudio desaigandhi said...

sir your mail receiving but no JS Code sir....

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF