welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Wednesday 18 January 2012

பென்டிரைவில் write protected பிழையை நீக்க..


 வணக்கம்நண்பர்களே!!
 
சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது
    "Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.


    எளிமையான வழி:

   Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.



reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevic ePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0


பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும்.இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.

reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevic ePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1

சில நேரங்களில் இதை அடித்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்.

நன்றி...........noreply@blogger.com

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF