வணக்கம் நண்பர்களே!
1) முதன்மையாக எந்தக் கணினிச் சூழல் உங்களுக்கு ஏற்றவாறு இருக்கும் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
‘உபுண்டு’ (Ubuntu) வின் (மிகவும் புகழ்பெற்றது) சீனோம் (GNOME) சூழல் ஆகும். இது ஆப்பிளின் ‘மாக்’ தளத்தை ஒத்திருக்கும்.
‘குபுண்டு’ (KUBUNTU) வின் கே.டி.ஈ (KDE) சூழல் விண்டோசு இயங்குதளத்தை ஒத்திருக்கும்.
சுபுண்டு (XUBUNTU) வின் எக்சு.எப்.சி.ஈ (XFCE) சூழல் பழமையான கணினிகளுக்கு ஏற்றவாறு இருக்கும்.
2) உங்கள் கணினியின் நேரடி அணுகு நினைவகத்தின் (‘RAM’) அளவு 256 மெ.பை. க்கும் குறைவாக இருந்தால் எழுத்து வடிவில் நிறுவ வேண்டும் (இது கடைநிலையில் வரைகலை வடிவமாக நிறுவப்பட்டு விடும்)
3) உபுண்டு இணையத்தளத்திலிருந்து படக் கோப்பினை (.iso file) பதிவிறக்கிக் குறுந்தகட்டில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
http://www.ubuntu.com/desktop/get-ubuntu/download என்ற சுட்டியில் இந்தக் கோப்பு பதிவிறக்கத்திற்குக் கிடைக்கும்.
4) உங்கள் கணினியில் ஏற்கனவே ஒரு இயங்கு தளம் (எடுத்துக்காட்டாக வின்டோசு) நிறுவப்பட்டு, நீங்கள் இருவழி கணினித் தொடக்கம் (dual boot) (வின்டோசு அல்லது உபுண்டு) வேண்டுகிறீர்கள் என்றால் உங்கள் வன்தட்டினை ஒருங்கமைத்து (Hard disk defragmentation) வைத்து கொள்ளுங்கள். (இதற்குக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போல் ஆகும்).
5) குறுந்தகட்டைச் செலுத்தி உங்கள் கணினியை மீண்டும் தொடக்குங்கள். உங்கள் கணினி குறுந்தகட்டினை ஏற்றுக்கொண்டு தொடங்கவில்லையென்றால் உங்கள் தொடக்க விருப்பப் பட்டியலுக்குச் ( BIOS menu - ஏசர், டெல் போன்ற கணினியென்றால் F2 அழுத்தவும், மற்றைய கணினிகளென்றால் F12 அழுத்தவும்) சென்று அங்கே குறுந்தகட்டிலிருந்து தொடங்கும் விருப்பத்தினைத் தேர்ந்தெடுத்த பிறகு கணினியை மீண்டும் தொடக்குங்கள். இப்போது கணினி குறுந்தகட்டினை ஏற்றுக்கொண்டு தொடங்கும்.
6) காட்சிக்கு எளிய விருப்பப் பட்டியல் ஒன்று கணினித்திரையில் தோன்றுவதற்குச் சில மணித்துளிகள் காத்திருங்கள்.
7) உங்கள் குறுந்தகட்டில் ஏதும் பழுதுகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று விருப்பப் பட்டியல் பணிக்கும்
- இதற்கு ‘winMd5sum’ போன்ற தனித்தன்மை நடைமுறைகளை இயக்கத் தேவையில்லை.
- இதற்கு ஒரு சில மணித்துளிகள் பிடிக்கும்; செய்து கொள்வதற்கும் சிறந்தது. ஏனென்றால், பழுதான குறுந்தகட்டினால் தடைகள் நேர வாய்ப்புண்டு.
8) உபுண்டுவை ஏற்றுங்கள். விருப்பப்பட்டியலில் ‘Try Ubuntu without any change to your computer’ என்ற விருப்பத்தினைத் தேர்ந்தெடுங்கள்.
9) குறுந்தகட்டிலிருந்து உபுண்டுவின் தகவல்கள் உங்கள் கணினிக்கு ஏற்றத் தொடங்கிவிடும். இது முழுமையாக நேரடி அணுகு நினைவகத்தில் நிகழ்கின்றது. உங்கள் வன்தகட்டில் எந்தப் பிரிவினையும் ஏற்படவில்லை.
10) நீங்கள் உபுண்டுவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் ‘Examples’ பொத்தானை அழுத்திச் சில கோப்புகளைப் பார்வையிடலாம். தேவையில்லையென்றால் உபுண்டு நிறுவுதல் பணியைத் தொடரலாம்.
11) கணிப்பொறித் திரையிலுள்ள ‘Install’ பொத்தானை அழுத்தித் தொடருங்கள்.
12) உங்கள் தனிப்பட்ட தகவல்கள் நிரப்புமாறு பணிக்கும். கவலை வேண்டாம். உபுண்டு இத்தகவல்களை வைத்து உங்கள் கணினி வளங்களை உங்களுக்குத் தனித்து வைக்கும். இத்தகவல்கள் எவற்றையும் இணையத்தில் கசிய விடாது.
13) உங்கள் கணினியில் உபுண்டு மட்டும் போதும் வேறெதுவும் வேண்டாம் என்றால் ‘Guided – Erase entire disk’ பொத்தானை அழுத்தவும். உங்களுக்கு விண்டோசு - உபுண்டு இருவழித் தொடக்க முறை வேண்டுகிறீர்கள் என்றால் உபுண்டுக்குத் தேவையான வன்தகடு அளவினைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
14) உங்கள் கணினியில் உபுண்டுவுடன் ஏற்புடைய வேறு இயங்கு தளம் இருந்தால் அதன் கோப்புகளையும் அமைப்புகளையும் புதிய உபுண்டு 7.04 விற்கு இடம் பெயர்த்துக் கொள்ளலாம்.
15) அவ்வளவு தான்! இப்போது உங்கள் கணினியில் உபுண்டுவை நிறுவிவிட்டோம்.
|
No comments:
Post a Comment