படைப்பாற்றல், கலைஞர்கள், இசை வல்லுநர்கள் அல்லது எழுத்தாளர்களுக்கு மட்டும் உரியதன்று. மாறாக, சாதாரண மக்களாலும் தவிர்க்க முடியாதது. நம் எல்லோரிடமும் இயல்பாகவே படைப்பாற்றல் என்னும் மகத்தான ஆற்றல் உள்ளது.
உளவியல் நிபுணரான ராபர்ட் ஜெ.ஸ்டெர்ன்பெர்க் என்பவர், “படைப்பாற்றலானது, எந்த அளவிற்கு அசலாக இருக்கிறதோ; அதே அளவிற்குப் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்” என்கிறார். அவரது கூற்றுப்படி, படைப்பாற்றலானது சிக்கல்களை தீர்ப்பதற்கான வழி மாத்திரம் அன்றி, இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கும் உதவுகிறது.