welcome

போட்டோகிராபர்காந்தி திருப்பூர் வலை பூ விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி! மிக்கநன்றி!

srikumarandigitalstudiotirupur

இங்கே பதியப்படும் பதிவுகளில்..நான் ரசித்தவை,
படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை, செய்திகள் என்பன அடங்கும்.மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

new add

Showing posts with label கணினி. Show all posts
Showing posts with label கணினி. Show all posts

Wednesday, 6 June 2012

கம்ப்யூட்டர் Assembling செய்வது எப்படி தமிழில் .உங்களுக்காக .


உங்கள் கம்ப்யூட்டர் பிரச்சனையா? நீங்கள்உங்கள் HardwareEngineer-ரை தொடர்பு கொள்ளவதற்கு முன் நீங்களே அதை சரி செய்ய முடியும்.
இந்த Video-ல் கம்ப்யூட்டர் Assembling செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுகிறார்கள் அதுவும் தமிழில் .
கம்ப்யூட்டர்யை Assembling செய்வது எப்படி? மற்றும் கணிப்பொறியில் உள்ள Parts- பற்றி அடிப்படையில் இருந்து இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இதை டவுன்லோட் செய்து நீங்களும் கம்ப்யூட்டர் Assembling செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க் :

நன்றி............(ORATHANADUKARTHIK)

Friday, 23 December 2011

போட்டோஷாப்பில் தமிழ் யூனிக்கோட் எழுத்துரு ..

வணக்கம் நண்பர்களே!! முன்பெல்லாம் தமிழ் தட்டச்சு தெரிந்தால் மட்டுமே தமிழில் எழுதும் வாய்ப்பு இருந்து வந்தது கணினியில் அதிலும் எழுத்துரு பிரச்சினை பல தளங்களில் இப்பவும் இருக்கிறது ஆனால் அந்த பிரச்சினையை முற்றிலும் களைய வந்தது தான் யூனிக்கோட் எழுத்துரு முறை இந்த வகையில் எழுத்துரு பிரச்சினை வருவதில்லை இன்று தமிழில் இனைய பக்கங்கள் அதிகமாக வளர்ந்து வருவதற்கும் இந்த தமிழ் யூனிக்கோட் எழுத்துரு மிக முக்கிய காரணமாகும்.

இப்பவும் யூனிக்கோட் முறை தெரிந்தாலும்

Wednesday, 21 December 2011

இணையப் பக்கங்களை பிடிஎப் கோப்பாக சேமிக்க..

வணக்கம் நண்பர்களே!!
பிடிஎப்(PDF) பரவலாக உபயோகிக்கப்படும் கோப்பு வடிவம். தகவல்களை பிடிஎப்(PDF) வடிவில் இணையத்தில் பகிர்ந்து வருவதை நீங்கள் கண்டிருக்கலாம். பிடிஎப் ரீடர் உள்ள எவருமே இந்த கோப்புகளை படித்துக் கொள்ள முடியும். 

நீங்கள் காணும் இணையதளங்கள், இணையப் பக்கங்களை நீங்கள் ஆன்லைனில் இல்லாத போது படித்துக் கொள்ள

இணையதளங்களின் கட்டாய பதிவில் இருந்து தப்பிக்க...

வணக்கம் நண்பர்களே!!   சில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும்.

அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில் இருந்து தப்பிக்க ஒரு தளம் வழி செய்கிறது. பதிவு செய்யாமலேயே ஏற்கனவே உள்ள பயனர் கணக்குகளை கொடுத்து லாகின் செய்து கொள்ள முடியும்.

Tuesday, 20 December 2011

மின்னஞ்சல் செல்லும் வழியை அறிய வேண்டுமா!

வணக்கம் நண்பர்களே!!
கோடிக்கணக்கில் இமெயில் என்னும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. எதுவும் வழி தவறியதில்லை. அனுப்புபவர் சரியான முகவரி தராமல் இருந்தால் ஒழிய, செல்லும் பாதையில் தொடர்புகள் அறுந்து போய் பிரச்னைகள் இருந்தால் ஒழிய இவை என்றைக்கும் தங்கள் இலக்கைத் தவறவிட்டது இல்லை. பிழை எதுவும் ஏற்படாமல் வழி பிசகாமல் செல்லும் இந்த இமெயில்களின் கட்டமைப்புதான் என்ன என்று இங்கு பார்ப்போம்.

Sunday, 4 December 2011

பேஸ்புக்குக்கு அடிமையாகும் பயனர்கள்.

வணக்கம் நண்பர்களே!!
              உலகம் முழுதும் பெருவளர்ச்சி கண்ட சமூக வலைத்தளம் ஃபேஸ்புக்.கணினி பயன்படுத்துபவர்கள் தினமும் பார்க்காதவர்கள் குறைவு. பல குழுக்கள் இருக்கின்றன.குருதிக் கொடையாளர்களுக்கு குழுக்கள் உள்ளன.சமூகப் பிரச்சினைகளை பேச,வாசகர் வட்ட்த்திற்கு,சினிமா ரசிகர்களுக்கென்று பல குழுக்கள்.ஏராளமான நல்ல விஷயங்கள் இதில் உண்டு.பதிவுகள் உள்பட பல தகவல்கள் ஏராளமானவர்களை சென்றடைகின்றன.
                             இன்று பேஸ்புக்

Saturday, 3 December 2011

ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய...


ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய...

Start மெனுவில் சென்று உங்கள் கணினியை Restart செய்வது தாமதமான
செயலாக இருக்கிறதா ? நீங்கள் விரும்பினால் ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய வைக்கலாம். அது மட்டும் இன்றி எவ்வளவு நேரம் கழித்து Restart ஆகவேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். அரை நிமிடம் அல்லது ஒரு நிமிடம் என்று அமைத்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் வேலையும் எளிதாகிறது. நேரமும் குறைகிறது. மின்சார செலவும் குறைய வாய்ப்பல்லவா ? இதை நீங்கள் இயக்கியவுடன் உங்களின் அனைத்து பயன்பாடுகளையும் தானாகவே மூடிவிட்டு Restart செய்கிறது. அனால் எல்லாவற்றையும் முன்பே நீங்கள் சேமித்து கொள்ள வேண்டும்.இந்த வேலையை செய்யுமாறு ஒரு Shortcut icon உருவாக்குவது எப்படி மட்டும் பார்ப்போம்.


1.உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து வரும் பட்டியில்
New -> Shortcut Icon என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. அடுத்தது குறுக்கு விசைக்கான இடத்தை கேட்கும். ( Location ). அதில் கீழ்க்கண்ட வரியை அடிக்கவும்.
shutdown -r -t 30 
(இதில் 30 என்பது விநாடிகளை குறிக்கிறது. உங்களுக்கு ஒரு நிமிடம் கழித்து ஆக
வேண்டும் எனில் 60 என்று கொடுக்கவும். )

3. அடுத்து குறுக்கு விசைக்கான ( Shortcut icon ) பெயரை தரவும். உதாரணமாக
Restart என்று கொடுத்துவிட்டு முடித்து விடுங்கள்.

4. இப்போது நீங்கள் இந்த Shortcut icon ஐ கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு
விண்டோஸ் உதவிப்பெட்டி தோன்றி அனைத்தையும் சேமியுங்கள் என்று எச்சரிக்கை செய்தியை அளிக்கும். நீங்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானாக Restart ஆகிவிடும்.

5. சரி நீங்கள் தவறாக Restart கொடுத்துவிட்டீர்கள். இதை எப்படி தடுப்பது என்று நினைத்தால்,
Start -> Run சென்று shutdown -a என்று அடித்தால் போதும். உங்கள் கணினி Restart ஆவது தடுக்கப்படும். நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...
Loading...

pdf

Print Friendly and PDF